For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாறு.. இந்தியா, பாகிஸ்தான் எத்தனை முறை கோப்பை வென்றுள்ளனர்?

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இலங்கை, வங்கதேசம் மோதவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை பங்கேற்க உள்ளன. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை ஏற்று வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Asia cup 2018 - Interesting facts and stastistics timeline

இந்த நிலையில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு தொடரிலும் எந்த நாடு வென்றது மற்றும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி பார்க்கலாம்.

1984 - முதல் ஆசிய கோப்பை இந்த ஆண்டில் தான் துவங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த அந்த போட்டியில், இந்தியா, இலங்கை பாகிஸ்தான் மட்டுமே மோதின. முதல் தொடரில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது.

1986 - இலங்கையில் நடந்த இந்த தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை. அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியா, இலங்கை செல்லவில்லை. வங்கதேசம் இந்த ஆண்டில் இருந்து தொடரில் சேர்ந்தது. பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது.

1988 - வங்கதேசத்தில் நடந்த தொடரில், இந்தியா, இலங்கையை இறுதியில் வென்றது. கோப்பையை இரண்டாம் முறையாக தட்டிச் சென்றது.

1990 - இந்த முறை தொடர் இந்தியாவில் நடந்தது. அரசியல் பிரச்சனைகள் அப்போது இரண்டு நாட்டிற்கும் பெரிதாக இருந்ததால், பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியது. இந்தியா, மீண்டும் இலங்கையை இறுதியில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

1993 - இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை பெரிய அளவில் இருந்ததால், ஆசிய கோப்பை தொடர் இந்த ஆண்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.

1995 - இந்த முறை ஷார்ஜாவில் நடந்தது தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மூன்று நாடுகளும் ரவுண்டு ராபின் சுற்றில் ஒரே புள்ளிகளை பெற்றனர். இறுதியில், நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறினர். இந்தியா இறுதியில் வென்று கோப்பையை பெற்றது.

1997 - இலங்கையில் நடந்த போட்டியில், அந்த அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

2000 - முதல் முறையாக இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிக்கு தகுதி பெறவில்லை. வங்கதேசத்தில் நடந்த இந்த தொடரில், பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

2004 - இந்த தொடரில் முதல் முறையாக ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் இணைந்தன. அதே போல, இரண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு தொடர் நடந்ததும் இந்த ஆண்டில் இருந்து தான். இந்த தொடரில் இலங்கை, இந்தியாவை வீழ்த்தியது.

2008 - பாகிஸ்தானில் நடந்த தொடரில் இந்தியா பங்கேற்றது. எனினும், இறுதியில் இலங்கை இந்தியாவை வீழ்த்தியது. அஜந்தா மென்டிஸ் தன் சுழல் வித்தையால் ஆறு விக்கெட் வீழ்த்தினார்.

2010 - 15 ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் ஆசிய கோப்பை தொடரை வென்றது. ஆனால், இந்த முறை இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த ஆண்டு தொடரில், வங்கதேச அணிக்கு எதிராக சேவாக் 6 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதுவே ஆசிய கோப்பை வரலாற்றில் மிக குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பந்துவீச்சு.

2012 - இந்த தொடரில் குரூப் சுற்றில் பாகிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது. எனினும், இந்தியா இறுதிக்கு முன்னேறவில்லை. பாகிஸ்தான், வங்கதேசத்தை இறுதியில் வீழ்த்தி கோப்பையை இரண்டாம் முறையாக வென்றது.

2014 - இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

2016 - முதல் முறையாக டி20 தொடராக நடத்தப்பட்ட இந்த ஆண்டு, இந்தியா, வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது.

6 - இந்தியா தான் ஆசிய கோப்பை தொடரை அதிக முறை வென்றுள்ளது. இந்தியா 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

0 - ஆசிய கோப்பை ஒருநாள் தொடர்களில் இதுவரை எந்த இந்திய வீரரும் ரன் அடிக்காமல் ஆட்டமிழந்ததில்லை.

Story first published: Friday, September 14, 2018, 17:20 [IST]
Other articles published on Sep 14, 2018
English summary
Asia cup 2018 - Interesting facts and stastistics timeline
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X