For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இது ஞயாபகம் இருக்கா சார்”.. பாபர் அசாமிற்காக ஆதரவு தரும் கோலி ரசிகர்கள்.. காரணம் அந்த ஒரு வார்த்தை!

துபாய்: இலங்கை அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த போதும், இந்திய ரசிகர்கள் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர்.

Recommended Video

SL vs PAK Final 23 ரன்கள் வித்யாசத்தில் இலங்கை அணி வெற்றி *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று இலங்கை அணியிடம் பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 170/6 ரன்களை குவிக்க, பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆசிய கோப்பை 6வது முறையாக இலங்கை வென்றது.. பாகிஸ்தான் படு தோல்வி.. ஸ்ரீலங்காவின் புதிய அத்தியாயம்ஆசிய கோப்பை 6வது முறையாக இலங்கை வென்றது.. பாகிஸ்தான் படு தோல்வி.. ஸ்ரீலங்காவின் புதிய அத்தியாயம்

பாபரின் சொதப்பல்

பாபரின் சொதப்பல்

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு கேட்ச்-கள் தவறவிடப்பட்டது முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், பாபர் அசாமின் சொதப்பல்கள் பாகிஸ்தானின் நம்பிக்கையை சரித்துவிட்டது என்றே கூற வேண்டும். 6 ரன்களை சந்தித்த அவர் எந்தவித பவுண்டரிகளும் இன்றி 5 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். லெக் சைட்டில் போடப்பட்ட பந்தை,, ஃபீல்டர் உள்ளார் என்பதை தெரிந்தே ஆடி அவுட்டானார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இந்நிலையில் பாபர் அசாமுக்கு ஆதரவாக திடீரென விராட் கோலி ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அவர் போட்ட ட்விட்டர் பதிவு தான். விராட் கோலி மிகவும் மோசமான ஃபார்மில் இருந்த போது, பாபர் அசாமும் ஆதரவு கொடுக்கும் வகையில் வந்தார். ட்விட்டரில் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, " இதுவும் கடந்து போகும்.. தைரியமாக இருங்கள் எனக்குறிப்பிட்டிருந்தார்"

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

பாபர் கூறியதை போன்றே விராட் கோலிக்கு நல்ல காலம் பிறந்தது. இந்த ஆசிய கோப்பையில் அவர், 5 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 276 ரன்களை குவித்தார். இதன் மூலம் 2022 ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் முகமது ரிஸ்வான் 281 ரன்களுடன் உள்ளார்.

 பாபர் அசாமின் நிலைமை

பாபர் அசாமின் நிலைமை

ஆனால் ஆறுதல் ட்வீட்டை போட்ட பாபரின் நிலைமை கோலியின் நிலையை விட மோசமாக ஆனது. இந்த தொடரின் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய பாபர் அசாம், வெறும் 68 ரன்களை மட்டுமே அடித்தார். அவரின் அதிகபட்சம் 30 ரன்கள் மட்டுமே ஆகும். டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக நீண்ட நாட்கள் நீடித்த அவருக்கா? இந்த நிலைமை என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் " கோலிக்கு அவர் போட்ட, இதுவும் கடந்துப்போகும் கருத்தை அவருக்கே கூறி வருகின்றனர்.

Story first published: Monday, September 12, 2022, 13:51 [IST]
Other articles published on Sep 12, 2022
English summary
Virat kohli fans Stands with Pakistan Captain Babar azam after he failed to impress in Asia cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X