For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹாட்ரிக் சிக்ஸ் அடிச்சும்.. ரஸலை நிற்க வைத்து.. கெத்தை நிரூபித்த ஸ்டார்க் - நம்ப முடியாத வெற்றி

செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, "நாங்களும் மதுரைக்காரன் தாண்டா" என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

Recommended Video

1st T20 Australia அணியை துவம்சம் செய்த West Indies | Oneindia Tamil

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், நேற்று 4வது போட்டி செம ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்தது.

19 ரன்களுக்கு 6 விக்கெட்கள்.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ரஸல்.. வெஸ்ட் இண்டீஸின் அசுரத்தனமான டி20 ஆட்டம்19 ரன்களுக்கு 6 விக்கெட்கள்.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ரஸல்.. வெஸ்ட் இண்டீஸின் அசுரத்தனமான டி20 ஆட்டம்

 பறக்க விட்ட மார்ஷ்

பறக்க விட்ட மார்ஷ்

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 44 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில், 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 190 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

 ஹாட்ரிக் சிக்ஸ்

ஹாட்ரிக் சிக்ஸ்

தொடக்க வீரர் சிம்மன்ஸ் 48 பந்துகளில் 72 ரன்கள் விளாச, எவின் லெவிஸ் 31 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியின் ஹீரோ கெயில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் 19வது ஓவரை ரிலே மெரிடித் வீசினார். இதில், மொத்தம் நான்கு சிக்ஸர்கள் பறந்தன. ரஸல் ஒரு சிக்ஸ் அடிக்க, ஃபேபியன் ஆலன் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசி, கடைசி பந்தில் அவுட்டானார்.

 ஆஸி., த்ரில் வெற்றி

ஆஸி., த்ரில் வெற்றி

அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 24 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்களே தேவைப்பட்டது. களத்தில் ரஸல் இருந்ததால், நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மணிக்கு 148 கி.மீ.வேகத்தில் வீசிய ஸ்டார்க், முதல் நான்கு பந்துகளை டாட் பால் ஆக்கி அசர வைத்தார். அப்போது கூட கடைசி இரு பந்தில் சிக்ஸர் அடிக்கலாம் என்று நினைத்த ரஸல் ஓவர் கான்ஃபிடண்ட்டில் இருக்க, 5வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடிக்க, மொத்தம் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றது.

 சும்மாவே நிற்க வைத்து

சும்மாவே நிற்க வைத்து

இதன் மூலம், இத்தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது. ரஸல் எப்பேர்ப்பட்ட காட்டடி வீரர் என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒருவரை, வைத்து கடைசி ஓவரில், வரிசையாக நான்கு பந்துகள் சும்மாவே நிற்க வைத்து, வெற்றிக்கான 11 ரன்களை கூட அடிக்கவிடாமல் தடுத்த ஸ்டார்க் உண்மையில் தான் ஒரு நம்பர்.1 பவுலர் என்பதை நிரூபித்துவிட்டார்.

Story first published: Thursday, July 15, 2021, 16:30 [IST]
Other articles published on Jul 15, 2021
English summary
australia beat west indies 4th t20 last over - ஆஸ்திரேலியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X