For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியை அவ்வளவு கிண்டல் செய்துவிட்டு.. தற்போது அஞ்சி நடுங்கும் ஆஸி. அணி.. எதிர்பாராத அவமானம்!

சிட்னி: தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேறும் ஆஸ்திரேலிய அணியின் முடிவு அந்த அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.

கொரோனா விதிகள் மற்றும் பரவலை காரணம் காட்டி ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது . இந்தியாவிடம் வீழ்ந்த விரக்தியில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து மொத்தமாக விலகி உள்ளது.

 இந்தியா vs இங்கிலாந்து: சென்னை 'போடா வெண்ணெய்' என்று உணர்த்திய தருணங்கள் இந்தியா vs இங்கிலாந்து: சென்னை 'போடா வெண்ணெய்' என்று உணர்த்திய தருணங்கள்

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா பரவல், அங்கு விதிக்கப்பட்டு இருக்கும் புதிய லாக்டவுன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் இந்த தொடர் ரத்தாகி உள்ளது.

எப்படி

எப்படி

முன்னதாக ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போன் நகரில் நடக்கும் போதும் இதே பிரச்சனை ஏற்பட்டது. அங்கு கொரோனா கேஸ்கள் அதிகம் பரவியது. அங்கு அதிக கொரோனா கேஸ்கள் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகள் போடப்பட்டு உள்ளது. அங்கு இந்திய வீரர்கள் கூடுதலாக சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

 மோசம்

மோசம்

ஆனால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகளை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் சிட்னியிலேயே நடத்த வேண்டும் , பிரிஸ்போன் நகரில் நடத்த கூடாது என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டது.

ஒப்புக்கொள்ளவேயில்லை

ஒப்புக்கொள்ளவேயில்லை

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்திய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உட்பட பலர் கிண்டல் செய்தனர். இந்திய வீரர்களால் கொரோனா விதிகளை மதிக்க முடியாது என்றால் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி செல்லலாம் என்றெல்லாம் விமர்சனம் வைத்தனர். கடைசியில் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்போன் நகரில் நான்காவது டெஸ்ட் போட்டியை ஆட இந்திய அணி ஒப்புக்கொண்டது.

ஒப்புதல்

ஒப்புதல்

ஆஸ்திரேலிய விதிகளை மதித்து பிரிஸ்பானில் களமிறங்கி, அங்கு கடைசியில் வெற்றியும் பெற்றது இந்திய அணி. இந்த தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி இங்கிலாந்து தொடருக்கும் தயாராகிவிட்டது. இந்திய வீரர்களை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்திய அதே ஆஸ்திரேலிய அணி தற்போது கொரோனா விதிகளுக்கு பயன்படுத்து தென்னாப்பிரிக்கா செல்ல மறுத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடு அதிகம் உள்ளது, பரவலும் அதிகம் உள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா செல்ல முடியாது என்று ஆஸி. கூறியுள்ளது.

மோசம்

மோசம்

ஆஸ்திரேலியாவின் இந்த கருத்தை பலரும் கிண்டல் செய்துள்ளனர். இந்தியாவிற்கு அவ்வளவு அறிவுரை சொல்லிவிட்டு, இப்போது கொரோனாவை காரணம் காட்டி நீங்கள் அஞ்சி ஓடலாமா? தென்னாபிரிக்கா அணிக்கு வாக்கு கொடுத்துவிட்டு, இப்போது பின்வாங்குவது சரியா என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

கேள்வி

கேள்வி

இந்திய வீரர்களை வெளியேறுங்கள் என்றெல்லாம் கிண்டல் செய்தீர்கள். தற்போது அதே கொரோனா லாக்டவுன் விதிகளுக்கு அஞ்சி ஒரு தொடரையே புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முடிவு அந்த அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.

Story first published: Wednesday, February 3, 2021, 18:49 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
Australia cancellation of the SA test tour sparks debate in social media on the teams double standard
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X