For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிரணியை கதிகலங்க வைத்த எல்லிஸ் பெர்ரி.. தொடையில் காயம்.. அணியிலிருந்து நீக்கம்

ஜங்ஷன் ஓவல் : தன்னுடைய திறமையான ஆட்டத்தால் எதிரணியை கலங்கடிக்கும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரிக்கு, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடைப்பகுதியில் காயமேற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை களைகட்டிவரும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, ரன்-அவுட் ஒன்றிற்காக முயற்சித்த போது அவரது தொடைப்பகுதியில் காயமேற்பட்டது.

Australias Ellyse Perry Ruled Out Of Womens T20 World Cup

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, முதல் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக மோதி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ஆயினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கடந்த 21ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய மகளிர் தங்களது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கால் ஆஸ்திரேலியாவை கலங்கடித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் ஓரம் கட்டினர். ஆஸ்திரேலிய மகளிர் சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் விளையாடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர்.

தொடர்ந்து இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் தற்போது அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளனர். கடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டி, ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சவாலான போட்டியாக அமைந்திருந்தது. போட்டியில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, ரன் அவுட் ஒன்றிற்கு முயற்சித்தபோது, தவறி விழுந்து தொடையில் காயம்பட்டு மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்கு பலத்த அடி பட்டுள்ளதாக அணி சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பெர்ரிக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிறிது காலத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அணியின் மருத்துவர் பிப் இங்கே தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெர்ரியின் இழப்பு அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்றாலும் மற்ற வீராங்கனைகளின் திறமைகளை கொண்டு உலக கோப்பையை கைப்பற்றுவோம் என்று அணியின் கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அணிக்காக எப்போதும் சிறப்பான ஆட்டங்களை அது பேட்டிங்காக இருந்தாலும், பௌலிங்காக இருந்தாலும், பீல்டிங்காக இருந்தாலும் ஆல்-ரவுண்டராக விளங்கும் எல்லிஸ் பெர்ரி வெளிப்படுத்தி வருபவர். அவருக்கு காயங்கள் ஏற்படுவது பெரிய விஷயம் இல்லை. பல சமயங்களில் பல்வேறு காயங்களால் அவர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்.

29 வயதான பெர்ரி, கடந்த 2009 முதல் அதாவது தன்னுடைய இளவயது முதல் உலக கோப்பை துவக்கப்போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா சார்பில் விளையாடி வருகிறார். இதுவரை 36 போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு பதிலாக இதுவரை யாருடைய பெயரும் இடம்பெற்றதில்லை. இந்நிலையில் அவர் இல்லாத உலக கோப்பை போட்டிகளை அந்த அணி சந்திக்க உள்ளது. இதனிடையே பெர்ரி இல்லாத உலக கோப்பை போட்டிகளை சந்திப்பது ஏமாற்றமாக உள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் மாத்யூ மோட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 3, 2020, 12:02 [IST]
Other articles published on Mar 3, 2020
English summary
Ellyse Perry injured her right hamstring while attempting a run out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X