
பின்ச் அசத்தல்
தொடர்ந்து வந்த கவாஜா 23 தான் எடுத்தார். நீண்ட நேரம் அவர் நிலைக்க வில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அசத்திய கேப்டன் பின்ச், மட்டையை நாலாபுறமும் சுழற்றினார்.

100 ரன்கள்
116 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என ஒருநாள் அரங்கில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்து வெளியேறினார். உலக கோப்பையில் அவர் அடிக்கும் 2வது சதமாகும் இது. சதம் அடித்த குஷியில் அதிரடியாக ஆட முற்பட்ட அவர் அடுத்த பந்தில் வெளியேற, ரசிகர்கள் ஏமாந்தனர்.

வேஸ்ட் மேக்ஸ்வெல்
அடுத்து வந்த மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் நன்றாக சொதப்பி விட்டு பெவிலியன் திரும்பினர். பின் வந்த கேரி, ஸ்டீவ் ஸ்மித்துடன் இருக்க, வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால் 38 ரன்கள் எடுத்த போது வெளியேறினார். கடைசி நேரத்தில் கேரி கொஞ்சம் அதிரடியை கையில் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது.

330 ரன்கள் எதிர்பார்ப்பு
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய ஆஸி.யின் ஆட்டத்தை பார்த்த போது, 330 ரன்களை எட்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வார்னரும், பின்சும் வெளியேறிய போது, அனைத்தும் தலைகீழானது. ஒட்டுமொத்த ஆட்டமும் இங்கிலாந்து பவுலர்களிள் கைகளுக்குள் புகுந்து கொண்டது.


Click it and Unblock the Notifications