For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடியலைடா சாமி! கையை தூக்கி.. பல்பு வாங்கி.. ஊரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆஸி வீரர்!

பெர்த் : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனி ஆளாக காட்டுக் கூச்சல் போட்டு, அவுட் கேட்டு "பல்பு" வாங்கினார்.

அத்தோடு நில்லாமல் அதை நியாயப்படுத்த அவர் சொன்ன காரணம் சிரிப்பை வரவழைத்தது. வர்ணனையாளர்கள் மற்றும் களத்தில் இருந்த சக வீரர்கள் உட்பட பலரும் அவரது காரணம் சொன்ன விதத்தை கண்டு குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வலுவான ஆஸ்திரேலியா அணியை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது நியூசிலாந்து.

ஆஸ்திரேலியா அபாரம்

ஆஸ்திரேலியா அபாரம்

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலலில் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. மார்னஸ் லாபுஷாக்னே சிறப்பாக ஆடி 143 ரன்கள் குவித்தார். வார்னர் 43, ஸ்மித் 43, ட்ராவிஸ் ஹெட் 56 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

அடுத்து நியூசிலாந்து ஆடி வந்தது. அப்போது 28வது ஓவரில் நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் பேட்டிங் செய்து வந்தார். அப்போது ஒரு பந்தை நிக்கோல்ஸ் அடிக்க முயற்சி செய்தார். எனினும், பந்து விக்கெட் கீப்பர் வசம் சென்றது.

அம்பயரிடம் அவுட் கேட்டார்

அம்பயரிடம் அவுட் கேட்டார்

அந்த பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியதாக நினைத்த மார்னஸ், அம்பயரிடம் அவுட் கேட்டார். பொதுவாக ஒரு அணியில் பலரும் சேர்ந்து தான் அவுட் கேட்டு அம்பயரிடம் முறையிடுவார்கள்.

காட்டுக் கூச்சல்

காட்டுக் கூச்சல்

ஆனால், அப்போது வேறு எந்த ஆஸ்திரேலிய வீரரும் அவுட் கேட்கவில்லை. தனி ஆளாக இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு, விக்கெட் எடுத்தது போன்று குதித்து, குதித்து, காட்டுக் கூச்சல் போட்டு அவுட் கேட்டார் மார்னஸ்.

அம்பயர் மறுப்பு

அம்பயர் மறுப்பு

எனினும், அம்பயர் உடனடியாக மறுத்து விட்டார். அப்போது தான் அவர் தான் மட்டுமே அவுட் கேட்டு இருப்பதை கண்டு, மற்ற வீரர்களிடம் தான் ஏன் அவுட் கேட்டேன் என்பதற்கான காரணத்தை கூறினார். அது தான் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது.

100 சதவீதம் கேட்டேன்

100 சதவீதம் கேட்டேன்

"நான் 100 சதவீதம் லேசான எட்ஜ் ஆகும் சத்தத்தை கேட்டேன்" என சைகையுடன் அவர் கூறிய உடல் மொழியை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிரித்தனர். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் குலுங்கி, குலுங்கி சிரித்தார்.

வர்ணனையாளர்கள் சிரிப்பு

போட்டியின் வர்ணனையாளர்கள் நேரலையில், பந்து எட்ஜ் ஆனதா என்பதை பார்த்து, மார்னஸ் குதித்தது மற்றும் காரணம் சொன்னது ஆகியவற்றை சுட்டிக் காட்டி அடக்க முடியாமல் சிரித்தனர்.

ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஸ்திரேலியா முன்னிலை

அதன் பின் நியூசிலாந்து அணி விரைவாக விக்கெட்களை இழந்தது. 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து நியூசிலாந்து. இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடி வரும் ஆஸ்திரேலியா, 400 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Saturday, December 14, 2019, 19:38 [IST]
Other articles published on Dec 14, 2019
English summary
Australia vs New Zealand : Steve Smith laughed over Marnus Labuschagne wicket appeal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X