ஆஸ்திரேலியா இந்தியாவை வெற்றி கொள்ளும் - ரிக்கி பாண்டிங் ஆரூடம்

சிட்னி : மும்பையில் நாளை துவங்கவுள்ள இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரில் இந்தியாவை ஆஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொள்ளும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதிலளித்த ரிக்கி பாண்டிங், இளம் வீரர் மார்னஸ் லாபுசாக்னே தனது முதல் ஒருநாள் சர்வதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சிரிப்பால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட விராட்

 டிவிட்டரில் ரசிகர்களுக்கு பதில்

டிவிட்டரில் ரசிகர்களுக்கு பதில்

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்தார். அதில் நாளை துவங்கவுள்ள ஆஸ்திரேலியா -இந்தியா தொடர் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ரிக்கி பாண்டிங் ஆரூடம்

ரிக்கி பாண்டிங் ஆரூடம்

இதில் ஆஸ்திரேலியா -இந்தியா சர்வதேச ஒருநாள் போட்டி குறித்து எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங், இந்தியாவை ஆஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவை வெல்லும்

இந்தியாவை வெல்லும்

உலக கோப்பை மற்றும் சமீபத்திய பாகிஸ்தான், நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் பெற்றுள்ள வெற்றிகள் காரணமாக ஆஸ்திரேலிய அணி அதிக அளவிலான தன்னம்பிக்கையுடன் காணப்படுவதாகவும் அதனால் இந்தியாவை ஆஸ்திரேலியா வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"2க்கு 1 கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும்"

ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் சர்வதேச போட்டியில் கடந்த முறை தோல்வியுற்றதற்காக பழிவாங்கும் வகையில் இந்தியா இந்த தொடரில் வெல்ல தீவிரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ரிக்கி பாண்டிங், ஆனாலும் வலிமையாக உள்ள ஆஸ்திரேலியா தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெல்லும் என்று கூறியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

இதேபோல ஆஸ்திரேலியாவின் இளம்வீரர் மார்னஸ் லாபுசாக்னே, டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ளதை போலவே இந்தியாவிற்கு எதிரான இந்த ஒருநாள் போட்டித் தொடரிலும் சிறப்பான விளையாட்டை தருவார் என்றும் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லாபுசாக்னே குறித்து ரிக்கி பாண்டிங்

லாபுசாக்னே குறித்து ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரில் மார்னஸ் லாபுசாக்னே சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்த ரிக்கி பாண்டிங், ஸ்பின் பந்துகளை அவர் சிறப்பாக எதிர்கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அச்சு அசல் ஸ்ரீகாந்த் ஆக மாறிய நடிகர் ஜீவா.. "83" போஸ்டருக்கு லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Australia will beat India - Ricky Ponting Predicts
Story first published: Monday, January 13, 2020, 14:25 [IST]
Other articles published on Jan 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X