For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சத்தமே இல்லை.. வாயை கூட திறக்காத ஆஸி. கேப்டன்.. மொத்தமாக அடங்கிய வீரர்கள்.. இது தேவையா?

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் யாரும் இந்திய அணி வீரர்களை இதுவரை ஸ்லெட்ஜ் செய்யவில்லை.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. நான்காவது டெஸ்டில் இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 விக்கெட்டை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. தற்போது வரை இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது

முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான காரணத்தால் இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது. 250 ரன்களை இந்திய அணி எடுப்பதே சந்தேகமான நிலையில் உள்ளது.

இந்தியா மட்டும் கடைசி மேட்ச்சை ஜெயித்தால்.. பாராட்டித் தள்ளிய சோயப் அக்தர்!இந்தியா மட்டும் கடைசி மேட்ச்சை ஜெயித்தால்.. பாராட்டித் தள்ளிய சோயப் அக்தர்!

 எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் யாரும் இந்திய அணி வீரர்களை இதுவரை ஸ்லெட்ஜ் செய்யவில்லை. கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக ஸ்லெட்ஜ் செய்தனர். முக்கியமாக ஆஸி. கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களை கடுமையாக ஸ்லெட்ஜ் செய்தார்.

ஸ்லெட்ஜ்

ஸ்லெட்ஜ்

இந்திய வீரர்கள் குறித்து பர்சனல் கேள்வி கேட்பது, அவர்களை இன ரீதியாக கேள்விக்கு உள்ளாக்குவது, ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பி கிண்டல் செய்வது என்று ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை அடுத்தடுத்து ஸ்லெட்ஜ் செய்தனர். அதிலும் கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் மிக கடுமையாக ஸ்லெட்ஜ் செய்தனர்.

மோசம்

மோசம்

இதற்கு முன்பெல்லாம் ஸ்லெட்ஜ் செய்தால் இந்திய வீரர்கள் டென்சன் ஆகி,தவறான ஷாட்களை ஆடி அவுட்டாவர்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்திய வீரர்களும் திருப்பி கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்திய வீரர்களும் உடனுக்குடன் ஸ்லெட்ஜ் செய்து பதிலடி கொடுக்கிறார்கள்.

கவனம்

கவனம்

முக்கியமாக ஆஸ்திரேலியாவின் ஸ்லெட்ஜிங் காரணமாக இந்திய அணியின் கவனம் பெரிய அளவில் சிதறுவது இல்லை. ஆஸ்திரேலியாவின் ஸ்லெட்ஜிங் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்திய வீரர்களை தேவையின்றி சீண்டி ஆஸ்திரேலிய வீரர்கள் அவமானப்பட்டதுதான் மிச்சம்.

சிக்கல்

சிக்கல்

இந்திய வீரர்களை ஸ்லெட்ஜ் செய்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்கள். இதன் காரணமாக தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் யாரும் இந்திய அணி வீரர்களை இதுவரை ஸ்லெட்ஜ் செய்யவில்லை. மொத்த்தமாக் ஆஸ்திரேலிய வீரர்கள் மௌனம் காத்து வருகிறார்கள்.

 கேப்டன் மௌனம்

கேப்டன் மௌனம்

முக்கியமாக அடிக்கடி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும் மேத்யூ வேட், மார்னஸ், டிம் பெயின் எல்லோரும் மௌனம் காத்து வருகிறார்கள். ஸ்லெட்ஜிங் மூலம் இந்திய வீரர்களை எதுவும் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் இந்திய வீரர்களை சீண்டுவதை நிறுத்தி உள்ளனர்.

Story first published: Sunday, January 17, 2021, 9:24 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
Australian players completely stopped doing sledging against Team India in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X