For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

டாக்கா: இந்திய அணியால் எதுவுமே செய்ய முடியாது என வங்கதேச கிரிக்கெட் அணியின் இயக்குநர் வம்பிற்கு இழுத்துள்ளார். இதனை கேட்டு இந்திய ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்ட இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. தாக்காவில் உள்ள பாங்களா தேசிய மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடத்திற்காக 3 பேர் போராட்டம்.. மிடில் ஆர்டரால் தலைசுற்றி நிற்கும் ரோகித்.. கடின முடிவை எடுப்பாரா? இடத்திற்காக 3 பேர் போராட்டம்.. மிடில் ஆர்டரால் தலைசுற்றி நிற்கும் ரோகித்.. கடின முடிவை எடுப்பாரா?

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த 1 - 0 என மோசமாக தோற்ற இந்திய அணி, வங்கதேச தொடரில் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும். இதற்கு ஏற்றார் போல இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர். மேலும் தாக்காவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கதேசத்தின் சீண்டல்

வங்கதேசத்தின் சீண்டல்

இந்நிலையில் இந்தியாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துள்ளார் வங்கதேச அணி இயக்குநர் அக்ரம் கான். இதுகுறித்து பேசிய அவர், இந்தியா மிகவும் சிறந்த அணி தான். ஆனால் வங்கதேசத்திற்கு தான் ஹோம் மைதானத்தில் அதிக பலம் உள்ளது. எங்கள் வீரர்களுக்கு நிறைய ஆதரவுகள் கிடைக்கும். எங்கள் வீரர்களை சரியாக பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் இந்தியாவை வீழ்த்துவோம்.

எதுவுமே செய்ய முடியாது

எதுவுமே செய்ய முடியாது

உண்மையை கூற வேண்டுமென்றால் வங்கதேச அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட 50 ஓவர் கிரிக்கெட்டில் மிகவும் பலமானது. இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்துவிட்டு வந்துள்ளோம். எனவே இந்தியா என்ன செய்தாலும், எங்களிடம் பலிக்காது என அக்ரம் கான் கூறியிருக்கிறார்.

உண்மை தகவல் தான்

உண்மை தகவல் தான்

உள்நாட்டில் வங்கதேசம் எப்போதுமே சற்று ஆபத்தான அணியாக தான் உள்ளது. ஏனென்றால் அந்த அணியின் பெரும்பாலான வெற்றிகள் உள்நாட்டில் தான். கடைசியாக இந்தியாவுடன் மோதிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கூட 2 - 1 என அபார வெற்றி பெற்று அசத்தியது. எனவே அதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக செல்கிறது.

Story first published: Saturday, December 3, 2022, 10:08 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Bangladesh Cricket Director akram khan Takes a dig at Team India ahead of 3 Match ODI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X