For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup 2019:அதிர்ச்சி அளிக்க காத்திருக்கும் அணிகள் வரிசையில் வங்கதேசம்...!!

லண்டன்:உலக கோப்பையில் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் அணியாக வங்க தேசம் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே, அதை பற்றிய சிறு தொகுப்பு இதோ....

ஐசிசி தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள வங்கதேச அணி உலக கோப்பை தொடரில் மோர்டாசா தலைமையில் களமிறங்குகிறது. ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணி, குட்டி பூனை என விமர்சிக்கப்பட்டது வங்கதேச கிரிக்கெட் அணி.

ஆனால், தற்போது மற்ற அணிகள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பாயும் புலியாக உருவெடுத்து நிற்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களில் எந்த அளவுக்கு பரபரப்பு தென்படுமோ, அதேபோன்ற பரபரப்பை ரசிகர்களிடையே சமீப கால அதிரடி ஆட்டங்கள் மூலம் சாதித்திருக்கிறது வங்க தேசம்.

யம்மாடி..!! உலக கோப்பையை காண முண்டியடிக்கும் ரசிகைகள்.. 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை...!! யம்மாடி..!! உலக கோப்பையை காண முண்டியடிக்கும் ரசிகைகள்.. 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை...!!

தோல்வியே இல்லை

தோல்வியே இல்லை

கடந்த 17ம் தேதி நடைபெற்று முடிந்த முத்தரப்பு போட்டியில் எதிரணிகளை மிரள வைத்துள்ளது வங்கதேசம். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி கோப்பையை தன் வசப்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் வங்கதேசம் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாதது குறிப்பிடத்தக்கது

மறக்க முடியாத போட்டி

மறக்க முடியாத போட்டி

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இலங்கையை பந்தாடி இந்தியாவுடன் இறுதி போட்டியில் குதித்தது வங்கதேச அணி. 20 ஓவர்களுக்கு 166 ரன்களை குவித்து இந்தியாவுக்கு வலுவான இலக்கையும் நிர்ணயித்தது வங்கதேசம். அந்த போட்டியில் இந்தியா போராடி தான் கோப்பையை வென்றது.

கடைசி பந்தில் வெற்றி

கடைசி பந்தில் வெற்றி

இதே போல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிபோட்டியில் இந்தியாவை சந்தித்தது. அந்த ஆட்டத்திலும் இந்திய அணி கடைசி பந்தில் தான் போராடி வெற்றி பெற்றது.

நெருக்கடி அளிக்கும்

நெருக்கடி அளிக்கும்

என்னதான் எதிரணிகள் வெற்றிபெற்றாலும் விடா முயற்சியுடன் இறுதி வரை மிகுந்த நெருக்கடி அளிப்பதில் வங்கதேச அணி சற்று கில்லி என்றே சொல்லலாம். எதிர்வரும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை மிக எளிதாக கருதிவிட முடியாது என்று கூறியிருக்கிறார் அனில் கும்ப்ளே.

பலம் வாய்ந்த வங்கதேசம்

பலம் வாய்ந்த வங்கதேசம்

மோர்டாசா தலைமையில் களமிறங்கும் 15 பேர் கொண்ட வங்கதேச அணி ஐசிசி தர வரிசையில் 7ம் இடத்தில் உள்ளது. ஷாகிப் அல் ஹாசன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், முஸ்ஃபிகுர் ரஹீம். லிட்டன் தாஸ் ரூபல் ஹூசைன் என அனுபவ வீரர்கள் புடை சூழ களமிறங்க காத்திருக்கிறது வங்கதேசம். பலம்வாய்ந்த அணிகளுக்கு கோப்பையை வெல்ல தடைக்கல்லாக நிற்குமா வங்கதேசம்..? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, May 28, 2019, 12:30 [IST]
Other articles published on May 28, 2019
English summary
Bangladesh cricket team may expect to very danger to all teams in ICC world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X