For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் ஆசிய கோப்பை.. இந்திய அணிக்கு பிசிசிஐ திடீர் சுற்றரிக்கை.. காரணம் ரோகித் சர்மா படை தான்!

மும்பை: இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ அதிகாரிகளிடம் இருந்து சுற்றரிக்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BCCI Advice to Indian womens team ahead of womens Asia cup 2022

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 7 நாடுகள் பங்கேற்கும் இந்த டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெறவிருக்கிறது.

ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2 - 1 என சொதப்பியது. இதனால் ஆசிய கோப்பையில் அனைத்து தவறுகளை சரி செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ-யிடம் இருந்து சுற்றறிக்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ஆடவர் அணி சிறப்பான ஃபார்மில் இருந்த போதும், ஆசிய கோப்பையில் பவுலிங்கில் சரியில்லாமல் இறுதிப்போட்டிக்கு கூட செல்லவில்லை. எனவே மகளிர் அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம்.. வரலாற்றை படித்தால் ஆச்சரியப்படுவீங்க.. செம கெத்துங்க ! ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம்.. வரலாற்றை படித்தால் ஆச்சரியப்படுவீங்க.. செம கெத்துங்க !

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, சஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேக்னா, ரிச்சா கோஷ், ஸ்னேஹ்ரானா, தயாளன் ஹேமலதா, மேஹ்னா சிங், ரேனுகா தாகூர், பூஜா வஸ்ட்ராக்கர், ராஜேஸ்வரி கெயிக்வாட், ராதா யாதவ், கே.பி.நாவ்கிர்

Story first published: Tuesday, September 27, 2022, 16:36 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
BCCI Officials Sent the Advice to Indian womens team ahead of womens Asia cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X