For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ருதுராஜ் முதல் ஷிவம் மாவி வரை.. இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி.. முற்றிலும் எதிர்கால படை!

மும்பை: இலங்கை அணியுடனான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 16 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டின் முதல் தொடராக இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

U-19 கேப்டனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? பிரித்வி ஷாக்கு மீண்டும் கொடுமை.. இது சரியான முடிவு? U-19 கேப்டனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? பிரித்வி ஷாக்கு மீண்டும் கொடுமை.. இது சரியான முடிவு?

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இதில் டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வுக்குழு இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழுவே இதனை தேர்வு செய்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கையில் ஏற்பட்ட காயம் சரியாவதற்கு கூடுதல் நேரம் வேண்டும் என்பதால் ஓய்வு தரப்பட்டுள்ளது.

யார் கேப்டன்

யார் கேப்டன்

இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. துணைக்கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவிருக்கிறார். இதே போல விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் ஓய்வு தரப்பட்டிருக்கிறது. முன்னணி பவுலர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜடேஜா முழு உடற்தகுதி பெறாததால் டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

ஓப்பனிங் இடங்களுக்கு இஷான் கிஷான், சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், ஆகியோருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் என அட்டகாசமான படை விளையாடவிருக்கிறது. எதிர்கால வீரர்களாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

 பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

இந்த முறை பவுலிங்கில் பெரும் படை களமிறக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் யுவேந்திர சாஹல் ஜோடி சேரவுள்ளார். வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோர் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி

இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி

சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்

Story first published: Tuesday, December 27, 2022, 22:57 [IST]
Other articles published on Dec 27, 2022
English summary
BCCI announced the Team India squad for srilanka t20 series, Hardik pandya to lead the team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X