ரெய்னா வந்துட்டார்ன்னு சொல்லு... தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய டி-20 அணி அறிவிப்பு!

Posted By:

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் பல முக்கியமான சிறப்பம்சங்கள் இருக்கிறது.

தற்போது இருக்கும் சென்னை அணியின் வீரர்கள் சிலர் இந்த அணியிலும் இருக்கிறார்கள். அதேபோல் சில வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இந்த டி-20 தொடரை இந்தியா வெற்றிபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட்

டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மோசமாக தோற்றது. இந்த நிலையில் நேற்று கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனால் 2-0 என இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது.

இந்தியா

இந்தியா

தற்போது டி-20 அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் கோஹ்லி, ரோஹித், ஷிகர் , லோகேஷ் ராகுல், ரெய்னா, டோணி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜெயதேவ் உனட்கட், ஷர்த்துல் தாக்குர் ஆகியோர் உள்ளனர்.

சூப்பர் கிங்ஸ்

சூப்பர் கிங்ஸ்

சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மூன்று பேர் இதில் உள்ளனர். ரெய்னா, டோணி ஆகியோர் அணியில் உள்ளனர். அதேபோல் ஷர்த்துல் தாக்குர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 2.60 கோடி கொடுத்து ஷர்த்துல் தாக்குர் ஏலம் எடுக்கப்பட்டார்.

மீண்டும்

அதேபோல் ரெய்னா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். இவர் மூன்று முறை யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்தார். தற்போது சில வாரம் முன்பு இவர் யோ யோ டெஸ்டில் வெற்றி பெற்று பார்மிற்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
BCCI announces Team India for T20 series against SA. Raina back to team. Some CSK players also playing in then game. Virat (Captain) Rohit (vc), Shikhar, KL Rahul, Raina, MSD (wk), Dinesh Karthik, Hardik, Manish, Axar, Chahal, Kuldeep, Bhuvneshwar, Bumrah, Unadkat, Shardul Thakur is the team .
Story first published: Sunday, January 28, 2018, 12:37 [IST]
Other articles published on Jan 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற