For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர முட்டுக்கட்டை போடுவது யார் தெரியுமா?

துபாய் : ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன், "பிசிசிஐ தான் கிரிக்கெட் ஒலிம்பிக் விளையாட்டில் இணைப்பதில் பெரிய தடையாக உள்ளது" என கூறியுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுக்களை நான்கு வருடத்திற்கு ஒருமுறை நாம் காண்போம். அப்போது எல்லாம் இந்தியாவில் ஒரு விவாதம் எழும்.

ஏன் கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்ஸில் இல்லை? என்ற விவாதம் தான் அது. முன்பு பல காரணங்கள் இருந்தாலும், இப்போது ஐசிசி அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிசிசிஐ முட்டுக்கட்டை ஏன்?

பிசிசிஐ முட்டுக்கட்டை ஏன்?

ஐசிசி கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்க எடுக்கும் முயற்சிக்கு இப்போது இருக்கும் ஒரே தடை பிசிசிஐ தான் என தெரிய வந்துள்ளது. இது பற்றி ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் பேசியுள்ளார். பிசிசிஐ ஏன் மறுக்கிறது என்பது பற்றி கூறியுள்ளார்

இந்திய அரசு தலையீடு வேண்டாம்

இந்திய அரசு தலையீடு வேண்டாம்

ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட் இணைந்தால் உலக போதை தடுப்பு நிறுவனம் மற்றும் தேசிய போதை தடுப்பு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டும். இது இந்திய அரசின் தலையீட்டை கிரிக்கெட்டில் கொண்டு வந்துவிடும் என நினைக்கிறது பிசிசிஐ.

முயற்சி செய்கிறோம்

முயற்சி செய்கிறோம்

அதன் காரணமாகவே பிசிசிஐ ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட்டை இணைக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ-ஐ ஒப்புக் கொள்ள வைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என டேவிட் கூறினார்.

பிசிசிஐ இறங்கி வருமா?

பிசிசிஐ இறங்கி வருமா?

கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்ந்தால் இந்த விளையாட்டு பல புதிய ரசிகர்களை பெறும். மேலும், பல நாடுகளில் இந்த விளையாட்டு வளரும் எனவும் கூறினார் டேவிட். இதை மனதில் வைத்து இந்தியா கீழே இறங்கி வர வேண்டும் எனவும் கூறினார். வரும் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது.

Story first published: Tuesday, September 25, 2018, 15:17 [IST]
Other articles published on Sep 25, 2018
English summary
BCCI is the obstacle between cricket and Olympics says ICC CEO David Richardson. Why BCCI not accepting the Cricket as olympic sport?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X