For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வீரரை மேட்ச் பிங்சிங்கிற்கு தூண்டிய மும்பை ரஞ்சி வீரர் ஹிகன் ஷா சஸ்பெண்ட்!

By Veera Kumar

மும்பை: ஐபிஎல் போட்டியின் போது ஊழல் அணுகுமுறை ஈடுபட்ட மும்பை ரஞ்சி வீரர் ஹிகன் ஷாவை இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இது மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் போது ஊழல் அணுகுமுறையில் ஈடுபட்டதாக மும்பை ரஞ்சி வீரர் ஹகென் ஷாவை சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்து உள்ளது.

BCCI suspends cricketer Hiken Shah for corruption in IPL

30 வயதான ஹிகென் ஷா சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவர் எந்த ஐபிஎல் அணியிலும் இடம்பெறவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் 37 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 2160 ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 42.35 ஆகும்.

ஹிகென் தன்னுடன் முதல்தர போட்டிகளில் விளையாடிய வீரர் ஒருவருடன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட அணுகி உள்ளார். முதல்தர போட்டிகளில் ஆடிய அந்த வீரர், ஒரு ஐபிஎல் அணிக்காக தற்போது ஆடிக்கொண்டுள்ளார். ஹிகெனின் இந்த அணுகுமுறை குறித்து அந்த வீரர் உடனடியாக தன்னுடைய அணி நிர்வாகத்திற்கு தெரிவித்து உள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்து உள்ளது.

இதை தொடர்ந்து இது குறித்து விசாரணைக்கு பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரவீன் தாம்பேவைத்தான், ஹிகென் அணுகியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story first published: Tuesday, July 14, 2015, 12:07 [IST]
Other articles published on Jul 14, 2015
English summary
The Board of Cricket for Control in India (BCCI), sent out a release stating that it was suspending batsman Hiken Shah "with immediate effect."
 for an 'inappropriate approach by a Mumbai player to his teammate before IPL 7.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X