கிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்!

மும்பை : கால்பந்தாட்டத்தின் மீதான விருப்பத்தால் கால்பந்தாட்ட வீரர்கள் போல் தங்களது ஹேர்ஸ்டைலை ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மாற்றிக் கொள்வதாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் போன்றவர்கள் தங்களது உடை மற்றும் ஹேர்ஸ்டைல் மூலம் இளைஞர்களை கவர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட் அணியில் கால்பந்தாட்டத்தை மிக சிறப்பாக விளையாடுபவர் முன்னாள் கேப்டன் தோனி தான் என்றும் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

 ரோகித் ஷர்மா மகிழ்ச்சி

ரோகித் ஷர்மா மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் கால்பந்தாட்டத்தை மிகவும் விருப்பத்துடன் பார்ப்பார்கள் என்று அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

 ஹேர்ஸ்டைலை மாற்றும் வீரர்கள்

ஹேர்ஸ்டைலை மாற்றும் வீரர்கள்

ஸ்பெயினில் நடைபெறவுள்ள லா லிகா தொடரின் இந்திய தூதராக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேசிய ரோகித் ஷர்மா கால்பந்தாட்டத்தின் மீதான அதிகப்படியான விருப்பத்தின் காரணமாக அதில் தங்களது மனம்கவர்ந்த வீரர்களை போல கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்களது ஹேர்ஸ்டைல்களை அமைத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 ரசிகர்களை கவரும் வீரர்கள்

ரசிகர்களை கவரும் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள், தங்களது டாட்டூஸ், ஹேர்ஸ்டைல் மற்றும் தங்களது அணுகுமுறையால் இளைஞர்களின் கனவு நாயகர்களாக வலம் வருகின்றனர்.

 சின்டைன் சிடேனின் ரசிகர்

சின்டைன் சிடேனின் ரசிகர்

பிரான்சின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் சின்டைன் சிடேனின் தீவிர ரசிகன் தான் என்று ரோகித் ஷர்மா தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது ஆட்டங்களை பார்க்கத் துவங்கிய பின்புதான் தனக்கு கால்பந்தாட்டத்தின்மீது அதிக ஆர்வம் வந்ததாகவும் ரோகித் தெரிவித்துள்ளார்.

 சிறந்த கால்பந்தாட்ட வீரர்

சிறந்த கால்பந்தாட்ட வீரர்

இந்திய கிரிக்கெட் பயிற்சிகளின்போது அணி வீரர்கள் கால்பந்தாட்ட பயிற்சிகளில் ஈடுபடுவது குறித்து குறிப்பிட்ட ரோகித் ஷர்மா, இந்திய அணியில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் தோனிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

 ரோகித் ஷர்மா பெருமிதம்

ரோகித் ஷர்மா பெருமிதம்

கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் இஷாந்த் ஷர்மா என்று குறிப்பிட்டுள்ள ரோகித் ஷர்மா, இஷாந்தை ஸ்வீடனை சேர்ந்த சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் என குறிப்பிடலாம் என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Football lovers Hardik pandya, KL Rahul, Shreyas Iyer Hairstyles Inspired by Footballers
Story first published: Friday, December 13, 2019, 13:04 [IST]
Other articles published on Dec 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X