பந்த்... அஸ்வின்... இவங்களை தொடர்வாரா புவனேஸ்வர் குமார்? ஆசையாக காத்திருக்கும் ரசிகர்கள்

டெல்லி :ஐசிசி மாத வீரர்களுக்கான விருது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமைகளில் அறிவிக்கப்படுகிறது.

கடந்த இரு மாதங்களில் ரிஷப் பந்த் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த விருதை கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய பெளலர் புவனேஸ்வர் குமார், சீன் வில்லியம்ஸ் மற்றும் ரஷீத் கான் இடையில் போட்டி நிலவுகிறது.

பிரதிமாதம் விருது

பிரதிமாதம் விருது

ஐசிசி பிரதிமாதம் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் இதன் முதல் விருதை இந்திய விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் தட்டி சென்றார்.

பிப்ரவரி மாத விருது

பிப்ரவரி மாத விருது

இதையடுத்து பிப்ரவரி மாதத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றவர் ரவிசந்திரன் அஸ்வின். அந்த மாதத்தில் அவர் தனது 29வது 5 விக்கெட் சாதனையை நிகழ்த்தியது உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுத்திய நிலையில், ஜோ ரூட் மற்றும் கைல் மேயர்ஸ் மற்றும் அஸ்வின் இடையில் நடைபெற்ற கடுமையான போட்டியில் வெற்றி பெற்றது என்னவோ அஸ்வின்தான்.

புவனேஸ்வர் குமார் பெயர் பரிந்துரை

புவனேஸ்வர் குமார் பெயர் பரிந்துரை

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்கான போட்டியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சீன் வில்லியம்ஸ், ஆப்கான் வீரர் ரஷீத் கான் மற்றும் இந்திய பௌலர் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த மாதத்திற்கான ஐசிசி விருது பெரும் வீரரின் பெயர் வரும் திங்கிட்கிழமை அறிவிக்கப்படும்.

இந்திய வீரர்களுக்கு விருது

இந்திய வீரர்களுக்கு விருது

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தனியாக தேர்வாளர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களும் இந்திய வீரர்கள் இந்த விருதை தட்டி சென்றுள்ள நிலையில், கடந்த மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்புரிந்த புவனேஸ்வர் குமார் தட்டி செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sean Williams, Rashid Khan and Bhuvneshwar Kumar -Nominations for the ICC Men's player of the month award of March
Story first published: Thursday, April 8, 2021, 15:10 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X