For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலே காயங்களுக்கு காரணம்.. முன்னாள் கேப்டன் சொல்லும் முக்கிய அட்வைஸ்!

Recommended Video

பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலே காயங்களுக்கு காரணம் - கபில் தேவ்

டெல்லி : வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலே அவர் காயமடைய காரணம் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

பும்ரா பாதுகாப்பான தொழில்நுட்பத்தை தன்னுடைய பந்துவீச்சில் பயன்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்றும் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

பும்ரா தன்னுடைய கைகளை அதிகமாக பயன்படுத்தாமல் பிஷான் பேடி போல தன்னுடைய உடலை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கபில்தேவ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 இந்திய அணியின் முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி பந்துவீச்சாளருமான கபில்தேவ் தான் அணியில் இருந்தபோது மிகுந்த சவாலான போட்டிகளில் களமிறங்கி வெற்றி கண்டவர்.

 பாதுகாப்பான தொழில்நுட்பம்

பாதுகாப்பான தொழில்நுட்பம்

பௌலர் பிஷான் பேடி மற்றும் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் கவாஸ்கர் போல பாதுகாப்பான டெக்னிக்கை பும்ரா பயன்படுத்தவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். 70 வயதானாலும் தற்போது பேட்டை கையில் கொடுத்து விளையாட சொன்னாலும் கவாஸ்கர் விளையாடுவார், அந்த அளவுக்கு அவருடைய ஆட்டம் பாதுகாப்பானது என்றும் கபில் தெரிவித்துள்ளார்.

 கபில்தேவ் புகழாரம்

கபில்தேவ் புகழாரம்

வீரேந்திர சேவாக், விஸ்வநாத் போன்றவர்களை போல விளையாட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கபில்தேவ், சச்சினை எடுத்துக் கொண்டால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு கூட அவரால் விளையாட முடியும் அந்த அளவிற்கு அவரது ஆட்டம் தொழில்நுட்பம் மிகுந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

 சிறந்த ஆட்டத்தை அளிக்க முடியும்

சிறந்த ஆட்டத்தை அளிக்க முடியும்

தொழில்நுட்பத்தில் சிறந்த பௌலிங்கை கைகொண்டால் மட்டுமே வேகப்பந்து வீச்சில் சிறந்த ஆட்டத்தை அளிக்க முடியும் என்றும் கபில்தேவ் தெரிவித்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைல் அவருக்கு காயங்களையே பரிசாக அளிக்க முடியும் என்று கபில் கூறியுள்ளார்.

 புவனேஸ்வர் குமார் போல உடலை உபயோகிக்க யோசனை

புவனேஸ்வர் குமார் போல உடலை உபயோகிக்க யோசனை

பும்ரா தன்னுடைய பௌலிங்கில் அதிகமாக கைகளையே உபயோகிக்கிறார். அதனாலேயே அவருக்கு அதிகமான காயங்கள் ஏற்படுகிறது. புவனேஸ்வர் குமார் போல, பௌலிங் செய்யும் போது அதிகமாக உடலை உபயோகிக்க பும்ரா பழக வேண்டும் என்றும் கபில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 பும்ராவிற்கு கபில்தேவ் ஆலோசனை

பும்ராவிற்கு கபில்தேவ் ஆலோசனை

அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டுமென்றால், நீளத்தை கண்டெடுத்து, விளையாட வேண்டும் என்றும் பந்தை எப்போதும் மேலே வைத்துக் கொள்வதன்மூலம் விக்கெட்டுகளை எளிதாக எடுக்க முடியும் என்றும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 28, 2019, 17:57 [IST]
Other articles published on Nov 28, 2019
English summary
Bumrah Action makes injuries to him - says kapil dev
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X