For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-ல் தோனியின் ஓய்வு.. சிஎஸ்கே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. பரபரப்பாக பேசி வரும் ரசிகர்கள்!

மும்பை: தோனியின் பிறந்தநாளை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடிய நிலையில் அவரின் ஓய்வு திட்டம் குறித்து காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

Recommended Video

CSK and Dhoni Fansக்கு Good News சொன்ன Kasi Viswanathan | IPL 2021 | OneIndia Tamil

தோனியை இந்திய அணியின் கேப்டனாக பார்க்க முடியாத ரசிகர்களுக்கு ஐபிஎல் மட்டுமே ஆறுதல் அளித்து வருகிறது.

பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல வாய்ப்பு.. இதனால் தான் பிசிசிஐ வாய்திறக்கவில்லை.. அதிகாரி தகவல் பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல வாய்ப்பு.. இதனால் தான் பிசிசிஐ வாய்திறக்கவில்லை.. அதிகாரி தகவல்

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக 200 போட்டிகளுக்கு மேல் செயல்பட்டு வெற்றிகரமான அணியாக வழி நடத்தி செல்கிறார்.

தோனி

தோனி

சென்னை அணிக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார். இதுவரை 200 போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஓய்வு எப்போது?

ஓய்வு எப்போது?

கடந்தாண்டு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஐபிஎல் போட்டிகளிலும் பேட்டிங்கில் திணறி வருகிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட போது, தோனியின் அதிரடியை காண முடியவில்லை. இதனால் அவர் இந்தாண்டு ஓய்வு அறிவிப்பார் என கூறப்பட்டது.

சிஎஸ்கே அறிவிப்பு

சிஎஸ்கே அறிவிப்பு

இந்நிலையில் சிஎஸ்கே அணி செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதுகுறித்து பேசியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடலாம். அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். கடும் பயிற்சிகளை செய்து வருகிறார். பின்னர் எதற்காக அவர் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற வேண்டும். இதுவரை அவர் செய்துவரும் அனைத்து விஷயங்களும் எங்களுக்கு மன நிறைவை அளித்துள்ளது.

தலைவன்

தலைவன்

அவரின் கேப்டன்சியை தவிர்த்து, அவர் ஒரு நல்ல வழிகாட்டி. மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன் என்றே கூறலாம். எங்களை பொறுத்தவரை தோனி இன்னும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறார். அவர் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்து கொடுப்பார். அவர் ஃபினிஷராக இருந்தார். இன்றும் அதை தான் செய்து வருகிறார் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 8, 2021, 16:57 [IST]
Other articles published on Jul 8, 2021
English summary
Chennai Super Kings CEO Kasi Viswanathan opens up on Dhoni's Retirement from IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X