For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கேப்டனாகும் புஜாரா.. பலே திட்டம் போட்ட பிசிசிஐ.. வங்கதேச தொடர் முதல் புதிய பதவி!

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சட்டீஸ்வர் புஜாரா செயல்பட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

இதில் டி20 தொடர் நாளை முதல் வெல்லிங்டனில் தொடங்கவுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நிரந்தர கேப்டனாகிறாரா ஹர்திக் பாண்ட்யா.. ரவிச்சாஸ்திரி கூறிய தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!இந்திய அணி நிரந்தர கேப்டனாகிறாரா ஹர்திக் பாண்ட்யா.. ரவிச்சாஸ்திரி கூறிய தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!

வங்கதேச போட்டி

வங்கதேச போட்டி

இந்த தொடரை முடித்தவுடன் இந்திய அணி நேரடியாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 22ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

கேப்டனாகும் புஜாரா

கேப்டனாகும் புஜாரா

இந்நிலையில் இந்த தொடர்களுக்கு முன்னதாக இந்தியா ஏ மற்றும் வங்கதேச ஏ அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தொடருக்கு இன்னும் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. எனினும் இதற்கான இந்திய அணியை சட்டீஸ்வர் புஜாரா வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கே.எஸ்.பரத், உமேஷ் யாதவ் போன்றவர்களும் இதில் விளையாடவுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. இந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். எனவே வங்கதேசத்தின் கால சூழல்களை புரிந்துக்கொள்ள இந்த 3 சீனியர் வீரர்களையும் முன்கூட்டியே அங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் மூன்று பேருமே இந்தியாவின் மெயின் அணி விளையாடும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக தெரிகிறது.

சஃப்ராஸ் கான்

சஃப்ராஸ் கான்

இந்த அணியில் மற்றொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் இளம் வீரர் சஃப்ராஸ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். ரஞ்சி மற்றும் சையது முஷ்டாக் அலி தொடர்களில் அட்டகாசமாக விளையாடியிருந்த இவர் தற்போது இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவரும் ரிஷப் பண்ட்-ஐ போல இந்திய அணிக்கு அதிரடி சொத்தாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, November 17, 2022, 23:45 [IST]
Other articles published on Nov 17, 2022
English summary
Cheteshwar Pujara to be Appoint as captain for Test Captain in Bangladesh series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X