கடைசியில் கெயிலுக்கும் ஐபிஎல்லில் இடம் கிடைத்தது.. பஞ்சாப் அணியிடம் கரை சேர்ந்தார்!

Posted By:
அனைவரையும் ஈர்த்த விக்கெட் கீப்பர்கள்.. புலம்பும் யுவராஜ் : ஐபிஎல்

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. ஏலத்தில் இதுவரை விற்கப்படாமல் இருந்த வீரர்கள் விற்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மதியம் முரளி விஜய் ஏலம் எடுக்கப்பட்டார். அதன்பின் பல முக்கியமான வீரர்கள் ஏலத்திற்கு வந்தார்கள்.

தற்போது கிறிஸ் கெயில் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

சிக்ஸர் மன்னன் கெயில்

சிக்ஸர் மன்னன் கெயில்

ஐபிஎல் என்றால் பலருக்கு சிக்சர் தான் நியாபகம் வரும். சிக்ஸர் என்றால் கண்டிப்பாக எல்லோருக்கும் கெயில் நியாபகம் வரும். ஆனால் இந்த தொடரில் கெயில் முதலில் எடுக்கப்படாமல் போவார் என்று யாருமே நினைத்து பார்க்கவில்லை.

இல்லை

இல்லை

நேற்று ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கெயில் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை.இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இவர் சென்ற போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று ஏலம் எடுக்கப்படவில்லை.

கெயில் எடுக்கப்பட்டார்

கெயில் எடுக்கப்பட்டார்

இந்த நிலையில் இன்று கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2 கோடி கொடுத்து கெயில் ஏலம் எடுக்கப்பட்டார். இதனால் இவர் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

இதனால் பஞ்சாப் அணி வலுவான பேட்டிங் ஆர்டர் பெற்று இருக்கிறது. பல முக்கியமான வீரர்கள் அந்த அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் பவுலிங் ஆர்டர் கூட அந்த அணிக்கு நன்றாக இருக்கிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction 2018 held in Bengaluru yesterday and today. Chris Gayle sold out to Punjab in IPL auction 2018. He sold out for 2.cr.
Story first published: Sunday, January 28, 2018, 16:27 [IST]
Other articles published on Jan 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற