ஐபிஎல்-லுக்கு முன்னாடியே தினமும் அதிரடி டி20 மேட்ச் பார்க்கணுமா? ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை!

ஜமைக்கா : கடந்த நான்கு மாதங்களாக அதிரடி டி20 தொடர்கள் பார்க்க முடியாமல் இளம் கிரிக்கெட் ரசிகர்கள் சோர்ந்து போயுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கினாலும் அதிக டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்த அளவில் ஒருநாள் போட்டிகள் தான் நடந்து வருகிறது.

ஐபிஎல் போன்ற முழு நீள டி20 தொடர்களை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

குடும்பத்தின் புது வரவிற்கு வரவேற்பு... களைகட்டிய வீடு... நன்றி சொன்ன ஆல்-ரவுண்டர்

ஐபிஎல் கொண்டாட்டம்

ஐபிஎல் கொண்டாட்டம்

ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று தான் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடங்கினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால், அதற்கு முன்பே அதிரடி டி20 போட்டிகளை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக் எனும் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸில் வருடா வருடம் நடந்து வருகிறது. ஆறு அணிகள் மோதும் இந்த தொடரில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பார்கள். இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.

ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள்

ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள்

டிவைன் பிராவோ, கீரான் பொல்லார்டு, சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், டேரன் சமி, கார்லோஸ் பிராத்வைட், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஈவின் லீவிஸ், கிறிஸ் லின், ராஸ் டெய்லர், இம்ரான் தாஹிர் என பெரும் டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் இந்த தொடருக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது அதிக கிரிக்கெட் தொடர்களும் இல்லாத நிலையில், இந்த ஆண்டு இந்த தொடருக்கான பார்வையாளர்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு அணிகள்

ஆறு அணிகள்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா சூக்ஸ், செயின்ட் கிட் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ், பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ், ஜமைக்கா தாளவாஸ் ஆகிய ஆறு அணிகள் மோத உள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 18 அன்று துவங்க உள்ளது.

இரண்டு போட்டிகள்

இரண்டு போட்டிகள்

ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் நடைபெறும் வகையில் அட்டவணை தயாராகி உள்ளது. இடையே சில நாட்கள் ஓய்வும் உண்டு. முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கும் துவங்கும்.

இறுதிப் போட்டி எப்போது?

இறுதிப் போட்டி எப்போது?

இந்திய ரசிகர்களுக்காகவே ஒரு டி20 போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் அரை இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 8 அன்றும், இறுதிப் போட்டி செப்டம்பர் 10 அன்றும் நடைபெற உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CPL 2020 : T20 is back with CPL 2020 league. Caribbean Premier League will took place before the IPL 2020. It starts from August 18 and ends on September 10.
Story first published: Wednesday, August 5, 2020, 21:41 [IST]
Other articles published on Aug 5, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X