ரெய்னாவிடம் பாஸ்வேர்ட் கேட்ட பின்னியின் மனைவி.. கோஹ்லி வரை பொங்கிய டிவிட்டர்

Posted By:

டெல்லி: கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் மாயந்தி மிகவும் பிரபலமானவர் ஆவர். கிரிக்கெட் வீரர்களை போலவே இவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி ஆவார். தற்போது இவர் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அவரது வைஃபை பாஸ்வேர்ட்டை கேட்டு இருக்கிறார். டிவிட்டரில் அவர் இப்படி வெளிப்படையாக கேட்ட சம்பவம் வைரல் ஆகியிருக்கிறது.

இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமாக பதில் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு பதிலும் வேற லெவலில் காமெடியாக இருக்கின்றது.

 வைரல் தொகுப்பாளர் மாயந்தி

வைரல் தொகுப்பாளர் மாயந்தி

ஸ்டார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மாய்ந்தி மிகவும் பிரபலமானவர் ஆவார். இவரது அழகான உச்சரிப்புக்கும், அழகுக்கும் கிரிக்கெட் உலகில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். சில கிரிக்கெட் வீரர்களை விட இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னிக்கும் மாய்ந்திக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இது காதல் திருமணம் ஆகும்.

ரெய்னாவின் வைஃபை பாஸ்வேர்ட்

இந்த நிலையில் தற்போது பல நாட்களுக்கு பின் இவர் மீண்டும் வைரல் ஆகியிருக்கிறார். டிவிட்டரில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் ரெய்னாவை டெக் டேக் செய்து ''உங்க வைஃபை பாஸ்வேர்ட் கிடைக்குமா'' என்று கேட்டு இருக்கிறார். இந்த டிவிட் போட்ட சில நிமிடத்தில் டிவிட்டர் உலகமே வைரல் ஆக தொடங்கியது.

பாஸ்வேர்ட் டோணியா இருக்கும்

இந்த நிலையில் இந்த டிவிட்டுக்கு பலரும் வித்தியாசமான பதில்களை காமெடியாக சொல்லி வருகின்றனர். அதில் ரெய்னா டோணியின் செல்லப்பிள்ளை என்பதால் கிண்டலாக இப்படி ஒருவர் கூறியிருக்கிறார். அதில் ''ரெய்னாவோட பாஸ்வேர்ட் டோணியா இருக்கும் முயற்சி பண்ணி பாருங்க'' என்று கூறியிருக்கிறார்.

ஷார்ட் பால் போடாதீங்க

இதில் இவர் ரெய்னாவின் கிரிக்கெட் ஸ்டைலை கலாய்க்கும் விதத்தில் பதில் எழுதி இருக்கிறார். சார்ட் பால்களை எதிர்கொள்ள முடியாமல் எப்போதும் திணறும் ரெய்னாவை கிண்டல் செய்து இருக்கிறார். அதன்படி ''நோ ஷார்ட் பால்ஸ் பிளீஸ் தான் பாஸ்வேர்ட்டா இருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

யோ யோ டெஸ்டை தடை பண்ணுங்க

சில நாட்களுக்கு முன் நடந்த யோ யோ டெஸ்டில் சுரேஷ் ரெய்னா தோல்வி அடைந்தார். இந்திய அணியில் இடம்பிடிக்க செய்யப்படும் மிக முக்கியமான் தேர்வு முறையாகும் அது. இதையடுத்து தற்போது இந்த வைஃபை விவகாரத்தை வைத்து அவரை கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதில் ''கண்டிப்பா யோ யோ டெஸ்டை தடை பண்ணுங்க என்பதுதான் பாஸ்வேர்ட்டாக இருக்கும்'' என்று இவர் கூறியிருக்கிறார்.

கோஹ்லியோட சண்டை

சில நாட்கள் முன்பு வரை கோஹ்லிக்கும் ரெய்னாவுக்கும் சண்டை என்று பேசப்பட்டு வந்தது. மேலும் அதனால்தான் கோஹ்லி ரெய்னாவை அணியில் எடுப்பதில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது அதை வைத்து கிண்டலாக பதில் எழுதி இருக்கின்றனர். அதன்படி ''கோஹ்லி என்னை மறுபடியும் டீம்ல எடுத்துக்குங்க...நீங்க்தான் கிரேட்'' என்று கூறியிருக்கிறார்.

Story first published: Wednesday, November 1, 2017, 12:55 [IST]
Other articles published on Nov 1, 2017
Please Wait while comments are loading...