For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கபில் தேவ், தோனி போல புகழடைவாரா கேப்டன் விராட் கோலி? உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறார்?

Recommended Video

WORLD CUP 2019 | உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறார் கோலி?- வீடியோ

சௌதாம்ப்டன் : விராட் கோலி பேட்டி அளிக்க வந்த போது அமைதியாக காணப்பட்டார். மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட தாடியுடன் தோன்றினார். அவரது அந்த தோற்றத்துக்கு ஏற்றவாறு, அவரது அமைதியான நடத்தை இருந்தது. அவர் மனதில் இருக்கும் சுனாமி போன்ற உணர்ச்சிகள் ஏதும் வெளிப்படவில்லை.

விராட் கோலி தன் மூன்றாவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடி எடுத்து வைக்கிறார். ஆனால், இதுதான் கேப்டனாக அவரது முதல் உலகக்கோப்பை. இந்திய கேப்டன்களின் புகழை நிர்ணயிப்பது, உலகக்கோப்பைகள் தான்.

Cricket World cup 2019 : Can Virat Kohli find the legacy of Kapil Dev and Dhoni?

1983இல் எதிர்பாரா வெற்றி தேடிக் கொடுத்த போது கபில் தேவ் புகழ் உச்சத்தை தொட்டது. தோனி வழிபடக் கூடியவராக இன்று மாற, கபில் தேவ் செய்ததை, 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் செய்து காட்டியதே!

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டிய சாஹல், பும்ரா.. அப்படி என்னதான் செஞ்சாங்க? #INDvsSA தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டிய சாஹல், பும்ரா.. அப்படி என்னதான் செஞ்சாங்க? #INDvsSA

ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் (2006) மற்றும் இங்கிலாந்து (2007) தொடர்களை வென்று காட்டியது. கேப்டன்சி மற்றும் தலைமைப் பண்பு அதிகம் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக 2007 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியதை வைத்துத்தான் அவர் நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிறார்.

ஆனால், இந்த முறை உலகக்கோப்பை வெல்லாவிட்டால், கோலி அந்தளவுக்கு மோசமாக வரலாற்றில் நினைவில் வைத்துக் கொள்ளப்பட மாட்டார். அவர் ஏற்கனவே, இந்திய அணியை மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆனால், இந்த உலகக்கோப்பை கோலிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு இறுதிக் கட்டமாக இருக்கும்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன் கோலி பேசுகையில், "2015 உலகக்கோப்பையில் ஆடும் போது இந்த நாளை நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஏனெனில், உலகக்கோப்பை கணிப்புகளுக்கு மிகவும் அப்பாற்பட்டது" என்றார்.

கோலி அளித்த 23 நிமிட பேட்டியில், ஒரு கேப்டனாக "புகழ்" அடைவதை குறித்து பேச மறக்கவில்லை. ரவுண்டு ராபின் முறை குறித்து அவர் கூறுகையில், "இந்த தொடரின் நீளம் மற்றும் வடிவத்தின் படி, எந்த கேப்டனுக்கும் இது கடினமான தொடர் தான். ஒன்பது போட்டிகளில் ஆட வேண்டும். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் நீங்கள் ஆட வேண்டும். எப்போதும் கால் நுனியில் நிற்க வேண்டும். உடனடியாக மாறிக் கொள்ள வேண்டும். நீங்கள் தெளிவாக, நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஆமாம், இது மிகவும் சவாலான தொடர் தான்" என்றார்

ஒவ்வொரு போட்டிக்கு முன்னும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் என்கிறார் கோலி. "2011 மற்றும் 2015இல் இதே போன்று தான் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. டெஸ்ட் போட்டியில் 10வது இடத்திலோ, 2வது இடத்திலோ பேட்டிங் செய்ய சென்றாலும், இதே போன்று வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். இது எப்போதும் இருக்கக் கூடிய ஒன்றுதான். அது கீழே இறங்கிச் செல்லும் போது, அடுத்து என்ன என்று உங்களுக்கு தெரியும்" என்றார்.

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் முன்பு, இரண்டு முறை கோலி சதம் அடித்துள்ளார். இந்த முறையும் சதம் அடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பதில் அளித்த கோலி, "நான் பேட்டிங் செய்ய செல்லும் போது, மக்கள் நான் சதம் அடிக்க வேண்டும் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அது செயல்பாட்டின் ஒரு பகுதி தான்." என்றார்.

அந்த செயல்பாடு தான் இப்போது வரை அற்புதமாக வேலை செய்து வருகிறதா? அடுத்த ஆறு வாரங்களுக்கு என்ன செய்யப் போகிறார்?

Story first published: Thursday, June 6, 2019, 7:20 [IST]
Other articles published on Jun 6, 2019
English summary
Cricket World cup 2019 : Can Virat Kohli find the legacy of Kapil Dev and Dhoni?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X