For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ட்விஸ்ட் வைத்த “ஜாம்பவான்” கிறிஸ் கெயில்.. வெ.இண்டீஸ் கேப்டனுக்கே தெரியாதாம்!

மான்செஸ்டர் : கிறிஸ் கெயில் களத்திலும், அதற்கு வெளியேயும் அனைவரையும் மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை.

பந்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அடிப்பதாக இருந்தாலும், மைக்கில் பேசுவதாக இருந்தாலும் கிறிஸ் கெயிலை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

Cricket World cup 2019 : Chris Gayle surprised everyone with his retirement decision

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஜாம்பவான்களிடையே உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்ட போது, "ஜாம்பவான்களுடன் நானும் இருக்கிறேன். அதில் சந்தேகமே இல்லை" என கிறிஸ் கெயில் கூறிய போது அதில் அகங்காரம் இல்லை. அவர் அதை தற்பெருமையாக கூறவில்லை என்பதை உணர்த்த, அவர் கூறும் போது செய்த புன்னகையே போதும்.

கிறிஸ் கெயில் குறைந்த ஓவர் போட்டிகளில் தான் சமீப காலத்தில் புகழ் பெற்றார். ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முச்சதம் அடித்த நான்கு வீரர்களில் ஒருவர் என்பது பலருக்கும் மறந்தே போய் விட்டது.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக 333 ரன்கள், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 317 ரன்கள் அடித்துள்ளார் கிறிஸ் கெயில். 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள கெயிலின் சராசரி 42.18. 7,214 டெஸ்ட் ரன்களையும் எடுத்துள்ளார் கெயில்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார் கிறிஸ் கெயில். அவருக்கு 39 வயது ஆகும் நிலையில், இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.

ஆனால், தற்போது இதில் ஒரு "ட்விஸ்ட்" வைத்துள்ளார் கிறிஸ் கெயில். அதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூட எதிர்பார்க்கவில்லை. தன் ஓய்வு முடிவை தள்ளி வைத்துள்ளார் கெயில். இந்திய அணிக்கு எதிரான தொடருடன் தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஊடக மேலாளர் மூலமாகவே தெரிந்து கொண்டுள்ளார் கேப்டன் ஜேசன் ஹோல்டர். இது குறித்து பேசிய போது, நாங்கள் அமர்ந்து இது குறித்து தீவிரமாக பேச வேண்டும் என்று கூறினார்.

கெயில் கூறுகையில், "டெஸ்ட் போட்டியில் ஆடினால் ஆடுவேன். நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவேன். ஆனால், டி20 போட்டிகளில் ஆட மாட்டேன். இது தான் உலகக்கோப்பைக்கு பின் என் திட்டம். இது இன்னும் முடியவில்லை. எனக்கு இன்னும் சில போட்டிகள் உள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் கெயில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 34 பந்துகளில் 50 ரன்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக 87 ரன்கள் அடித்ததே அவரது சிறப்பான பங்களிப்பு. இந்திய அணிக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் கெயில்?

கடந்த 12 இன்னிங்க்ஸ்களில் இந்திய அணிக்கு எதிராக ஒரே ஒரு அரைசதம் தான் அடித்துள்ளார். பும்ராவை கண்டு பல முன்னணி பேட்ஸ்மேன்கள் திணறுவதைப் போல, கெயிலும் திணறுகிறார் என்பதே உண்மை. இன்றைய போட்டியில் அதை மாற்றிக் காட்டுவாரா?

Story first published: Thursday, June 27, 2019, 12:15 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
Cricket World cup 2019 : Chris Gayle surprised everyone with his retirement decision
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X