For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தானா சேர்ந்த கூட்டம்.... புனேவுக்கு விசில்போடு எக்ஸ்பிரசில் படையெடுத்த சிஎஸ்கே ரசிகர்கள்

ஐபிஎல்லில் புனேயில் நடக்கும் சிஎஸ்கே அணியின் முதல் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் அடங்கிய விசில்போடு எக்ஸ்பிரஸ் புனே வந்தடைந்தது.

Recommended Video

CSK அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே பயணம்- வீடியோ

புனே: கிரிக்கெட் போட்டி என்பது தலா 11 பேர் கொண்ட அணிகளுக்கு இடையேயான விளையாட்டு மட்டுமல்ல. அதை பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் ஆதரவும்தான் முக்கியம். அவ்வாறு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டது சிஎஸ்கே அணி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. புனேவுக்கு சிறப்பு ரயில் மூலம் ரசிகர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.

ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகின்றது. இதுவரை 16 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி மீண்டும் களமிறங்கியுள்ளதால், இந்த சீசன் களைகட்டியுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர், மிகப் பெரிய ரசிகர்கள் ஆதரவைக் கொண்டது. அதனால்தான், 10 சீசன்கள் முடிந்து, 11வது சீசன் நடக்கும்போதும், அதற்கு மிகப் பெரிய வரவேற்பு, எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சீசனில் பங்கேற்கும் 8 அணிகளில், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டது சிஎஸ்கே அணி. குறிப்பாக கேப்டன் கூல் டோணி்யை, நம்ம வீட்டுப் பிள்ளையாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

 புனேவுக்கு ரசிகர்கள் ஆதரவு

புனேவுக்கு ரசிகர்கள் ஆதரவு

இடையில் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட்டபோது, ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிக்காக டோணி விளையாடினார். அந்த ஒரு காரணத்துக்காகவே, அந்த அணிக்கு தமிழகத்தில் இருந்த ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

 போட்டிகள் மாற்றம்

போட்டிகள் மாற்றம்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் சிஎஸ்கே விளையாடும் ஆட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரி போராட்டம் காரணமாக போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

 விசில்போடு எக்ஸ்பிரஸ்

விசில்போடு எக்ஸ்பிரஸ்

ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத சிஎஸ்கே நிர்வாகம், சென்னையில் இருந்து ரசிகர்களை புனேவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட, விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயில் புனேவை இன்று அடைந்துள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து, உணவு, தண்ணீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 குவாட்டர், பிரியாணி கூட்டமல்ல

குவாட்டர், பிரியாணி கூட்டமல்ல

ஆனால், இது கூட்டங்களுக்கு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து அழைத்து செல்லப்பட்ட கூட்டம் இல்லை. இது தானாக சேர்ந்த கூட்டம். சிஎஸ்கே போட்டியை பார்ப்பதற்காக சேர்ந்தவர்கள்.

Story first published: Friday, April 20, 2018, 16:50 [IST]
Other articles published on Apr 20, 2018
English summary
Whistlepodu express train with CSK fans reached Pune. CSK to meet RR today night.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X