For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே-வோட பௌலிங் நல்லா இருக்குன்னா அதுக்கு இவங்க 2 பேரும் தான் காரணம்!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தலாக தொடரை துவக்கி உள்ளது சென்னை அணி.

இந்த வெற்றிக்கு காரணம் தோனியின் தலைமை தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கடுத்து சென்னை அணியின் பேட்டிங் பலத்தை காட்டிலும், பந்துவீச்சு அபாரமாக உள்ளது என்பதே அந்த அணியின் தொடர் வெற்றிக்கு காரணம்.

தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய அந்த பிரபல ராஜஸ்தான் வீரர்... ரசிகர்கள் ஆச்சர்யம் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய அந்த பிரபல ராஜஸ்தான் வீரர்... ரசிகர்கள் ஆச்சர்யம்

கலக்கல் வீரர்கள்

கலக்கல் வீரர்கள்

சென்னை அணியின் பந்துவீச்சில் மூன்று போட்டிகளிலும் கலக்கிய வீரர்கள் இம்ரான் தாஹிர் மற்றும் தீபக் சாஹர். இருவரும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களது ஓவர் ரன் விகிதம் - இம்ரான் தாஹிர் - 5.20, தீபக் சாஹர் 4.66.

அதிக விக்கெட்கள்

அதிக விக்கெட்கள்

மேலும், இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் மூன்று போட்டிகளில் 6 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

அதிக டாட் பால்

அதிக டாட் பால்

அதே போல, தீபக் சாஹர் அதிக டாட் பால் வீசியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 3 ஐபிஎல் போட்டிகளில் 36 டாட் பால் வீசி இருக்கிறார். பவர்பிளே ஓவர்களில் கூட தீபக் சாஹர் ரன்களை வெகுவாக கட்டுப்படுத்துவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

ஹர்பஜன், ஜடேஜா எப்படி?

ஹர்பஜன், ஜடேஜா எப்படி?

இவர்கள் தவிர்த்து ஹர்பஜன் சிங், ஜடேஜா இருவரும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த இடங்களில் இருக்கின்றனர். கடைசி ஓவர்களில் பிராவோ தான் சென்னை அணியின் ஒரே தீர்வாக இருக்கிறார்.

தோனியின் திட்டம்

தோனியின் திட்டம்

சென்னை அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் சரியாக அமையாத நிலையில், அதிக சர்வதேச அனுபவமற்ற தீபக் சாஹர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். தோனி சுழற் பந்துவீச்சை மையமாக வைத்து தன் திட்டங்களை செயல்படுத்துகிறார். அதற்கு இம்ரான், ஹர்பஜன், ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இந்த திட்டம் சரியாக வேலை செய்யும் பட்சத்தில் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரை சென்னை அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, April 1, 2019, 14:31 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
CSK vs RR : Imran Thahir, Deepak Chahar bowling performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X