For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை தொடரில் வார்னர் விளையாடுவாரா…? கடைசி கட்ட பரபரப்பில் ரசிகர்கள்

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் நசுக்கி தள்ளியது. இதையடுத்து நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வார்னருக்கு காயம்

வார்னருக்கு காயம்

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. இந் நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘வார்னர் அணியில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

அணிக்கு பின்னடைவு

அணிக்கு பின்னடைவு

மற்ற வீரர்களை போல கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பார். அவர் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விளையாட்டு போட்டிகளில் தடை விதிக்கப் பட்டவர் டேவிட் வார்னர். தடை முடிந்த பின்னர் ஐபிஎல் போட்டிகளில் களம் புகுந்து கலக்கினார். அவர் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவு தான்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, முதல் போட்டியில் தர வரிசையில் 10 வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. தடைக்கு பின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் அணிக்குத் திரும்பிய பின், அணியின் ஆட்டம் எங்கேயோ போனது. வார்னர், ஸ்மித் இருவருமே நல்ல பார்மில் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு மேக்ஸ்வெல் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சுழற்பந்தை எளிதாக எதிர்கொள்வர்.

ஆஸி. வெற்றி

ஆஸி. வெற்றி

உலக கோப்பையின் இளம் அணியான ஆப்கானிஸ்தான், லெக் ஸ்பின்னர் ரஷித் கான், மிஸ்ட்ரி ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், ஆப் ஸ்பின்னர் முகமது நபி ஆகியோர் அடங்கிய சுழல் கூட்டணியை நம்பியிருக்கிறது. இந்த மூவரும் சேர்ந்து 30 ஓவர்கள் வீசுவர். சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, உலக கோப்பையிலும் சரி, இந்த இரு அணிகளும் பெரிதாக போட்டிகளில் சந்திக்க வில்லை. உலக கோப்பை உட்பட 2 போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் ஆஸ்திரேலியாவே வாகை சூடி இருக்கிறது.

வெற்றி சாத்தியமா?

வெற்றி சாத்தியமா?

பெர்த் மைதானத்தில் நடந்த 2015 உலக கோப்பை குரூப் சுற்றில், டேவிட் வார்னர் 178 ரன்கள் விளாசி தள்ளினார். ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இந்தமுறை வார்னர் இல்லாத நிலையில் அது போன்ற ஒரு வெற்றி சாத்தியமா என்று தெரியவில்லை.

Story first published: Friday, May 31, 2019, 20:37 [IST]
Other articles published on May 31, 2019
English summary
David warner may miss tomorrows match against Afghanistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X