வெளியே சென்ற கேதார் ஜாதவ்.. உள்ளே வந்த இங்கிலாந்துகாரர்.. சிஎஸ்கேவில் இணையும் புதிய வீரர்!

Posted By:

சென்னை: சென்னை அணியில் தற்போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று இவர் சென்னை அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

கேதார் ஜாதவ் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அணியில் இருந்து விலகி உள்ளார்.

சமயங்களில் இவர் மீண்டும் அணிக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு பின் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

ஏன் விலகல்

ஏன் விலகல்

கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில்தான் ஜாதவிற்கு அடிப்பட்டது. இதனால் அந்த போட்டியில் இருந்து பாதியில் விலகினார். பின் கடைசி நேரத்தில் வந்து சென்னை அணிக்காக வின்னிங் ஷாட் அடித்தார். தற்போது காயம் மோசமானதால் அணியைவிட்டே விலகியுள்ளார்.

டேவிட் வில்லி

டேவிட் வில்லி

சென்னை அணியில் தற்போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி சேர்க்கப்பட்டு உள்ளார். 28 வயது நிரம்பிய இவர் 2015ல் இருந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளார். இன்றைய போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

பவுலர்

பவுலர்

சென்னை அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் பஞ்சம் நிலவுகிறது. அந்த இடத்தை வில்லி பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது கை பந்து வீச்சாளரான இவர், கடைசி நேரத்தில் ஓவர் போடுவதில் மிகவும் திறமையானவர். கடைசி 19, 20 ஓவர்கள் பொதுவாக இவருக்கு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

அதே போல் இவர் சிறந்த ஆல்ரவுண்டரும் கூட. சமீபத்தில் நடந்த இங்கிலாந்து கிளப் போட்டி ஒன்றில் இவர் வெறும் 36 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். சென்னை அணிக்கு இவர் மிகுந்த உதவியாக இருப்பார். கேதார் ஜாதவ் இடத்தை இவர் கண்டிப்பாக நிரப்புவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
David Willey joins in CSK Den replacing Kedhar Jadhav.
Story first published: Tuesday, April 10, 2018, 10:36 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற