வாவ் ஸ்பைடர் மேன் கேட்ச்.. ஆஸி - தென்னாப்பிரிக்க டெஸ்டில் டியான் எல்கர் செய்த சாகசம் - வீடியோ

Posted By:

கேப்டவுன்: ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டியான் எல்கர் பிடித்த கேட்ச் மிகவும் வைரல் ஆகியுள்ளது.

இந்த தொடரில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டன் டிம் பெயின் விளையாடிக் கொண்டு இருக்கும் போது இந்த சூப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டுள்ளது.

டிம் பெயின் 62 ரன்கள் எடுத்து இருந்த போது ரபாடா பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் தரையில் விழ இருந்த பந்தை பறந்து பிடித்துள்ளார் டியான் எல்கர்.

தொடர்

தொடர்

இந்த ஒரு தொடரில் அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்து வருகிறது. ஸ்மித், வார்னர், கேமரூன் தடை செய்யப்பட்டது. வார்னர் டு பிளசிஸ் இடையே நடந்த சண்டை என நிறைய விஷயங்கள் இந்த போட்டியில் வைரல் ஆனது. தற்போது 4வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

தேனீ செய்த காமெடி

நேற்று முதல் நாள் ஆட்டத்தில் சரியாக 30வது ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் வீசிய பந்தை அடிக்க ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் வெளியே சென்றார். ஆனால் அவர் மிஸ் செய்த பந்தை கீப்பர் குயிண்டன் டி காக் பிடித்தார். ஆனால் அவர் இந்த நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தி விக்கெட் எடுக்காமல் பந்தை தவறவிட்டார்.அவரது கையை தேனீ கடித்ததுதான் இதற்கு காரணம். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

டியான் எல்கர்

இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்க வீரர் டியான் எல்கர், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை விக்கெட் எடுக்க பிடித்த கேட்ச் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பின்பக்கமாக வேகமாக ஓடிப்போய் இவர் பிடித்த கேட்ச் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

சூப்பர்

இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக கிரிக்கெட் பிரபலங்கள் கூட இதை பாராட்டியுள்ளனர். இவர் வாவ் இதுதான் இந்த நூற்றாண்டின் சிறந்த கேட்ச் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dean Elgar's perfect catch to dismiss Tim Paine becomes viral during the 4th test match between Aus vs SA.
Story first published: Monday, April 2, 2018, 17:19 [IST]
Other articles published on Apr 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற