தனியாளாக பெங்களூருவின் கோஹ்லி போராடினார்... முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்

Posted By:
பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை

மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் எவின் லூயிஸ் அதிரடி அரைசதம் அடித்தனர். அடுத்து விளையாடிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனியாளாக போராடி ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தார். ஆனால், பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில், மும்பைக்கு இந்த சீசனில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 13 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஐதராபாத் அணி 3 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா, பஞ்சாப், சிஎஸ்கே அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்ற பெருமையை உடைய டெல்லி அணிகூட ஒரு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மிகவும் வலுவான அணியைக் கொண்டுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கே அணியுடன் முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வியின் பாதிப்பில் இருந்து மும்பை இன்னும் மீளவில்லை. அந்த ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் பிராவோ அதிரடி காட்ட, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

 ஹாட்ரிக் தோல்வியில் மும்பை

ஹாட்ரிக் தோல்வியில் மும்பை

மும்பை தனது இரண்டாவது ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் மோதியது. இதிலும் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வென்றது. தனது மூன்றாவது ஆட்டத்தில் டெல்லியுடன் மும்பை மோதியது. இதிலும் கடைசி பந்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வென்றது.

 ஏமாற்றத்தில் கோஹ்லி

ஏமாற்றத்தில் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை. இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.

 ராஜஸ்தானிடம் தோல்வி

ராஜஸ்தானிடம் தோல்வி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்களுக்கு சுருட்டிய பெங்களூரு, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 19 ரன்களில் தோல்வியடைந்தது.

 தோல்வியை தவிர்க்குமா

தோல்வியை தவிர்க்குமா

மும்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. ரன் ஏதும் எடுக்காமல் முதல் இரண்டு பந்துகளில் சூர்யகுமார் யாதவ், இஷாண் கிஷண் விக்கெட்களை மும்பை இழந்தது. எவின் லூயிஸ் 65 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 52 பந்துகளில் 94 ரன்களும் எடுத்தனர்.
214 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தன. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே பெங்களூரு எடுத்தது. இதன் மூலம், 46 ரன்கள் வித்தியாசத்தில், இந்த சீசனில் முதல் வெற்றியை மும்பை பெற்றுள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Defending champion Mumbai Indians looking to regain from the losses in the IPL.
Story first published: Tuesday, April 17, 2018, 17:07 [IST]
Other articles published on Apr 17, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற