ஸ்மித்திற்கு வந்த சோதனை... வாய்ப்பு கிடைப்பதே சந்தேகம்... என்ன முடிவெடுப்பார் ரிஷப் பண்ட்?

மும்பை: டெல்லி அணிகாக முதல் முறையாக ஆடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடர் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அணிகளின் ப்ளேயிங் 11 ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

7 மணி பயிற்சிக்கு 4 மணிக்கே மைதானத்துக்கு வந்துடறாரு... மூத்த வீரரை பத்தி தினேஷ் சொல்லியிருக்காரு

இந்நிலையில் டெல்லி அணியால் இந்த முறை ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியில் எந்த இடம் கிடைக்கும் என அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட ஸ்மித்

விடுவிக்கப்பட்ட ஸ்மித்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு வரை ராஜஸ்தான் அணிகாக ஆடி வந்தார். ஆனால் கடந்தாண்டு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் மிக மோசமாக செயல்பட்டதால் இந்தாண்டு விடுவிக்கப்பட்டார். இதனால் இந்தாண்டு டெல்லி அணி அவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

சந்தேகம்

சந்தேகம்

டெல்லி அணியின் டாப் ஆர்டரில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் என ப்ளேயர்கள் உள்ளதால் புதிதாக வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

பாண்டிங் பதில்

பாண்டிங் பதில்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டின், ஸ்டீவ் ஸ்மித்திற்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்காது, ஆனால் அப்படி கிடைத்தால் அவர் டாப் 3 இடங்களில் களமிறக்கப்படுவார். இந்தாண்டு ஐபிஎல்-ல் விளையாட ஸ்மித் மிக மிக ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆர்வமாக இருக்கும் ஸ்மித்

ஆர்வமாக இருக்கும் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நாட்களாக விளையாடி வந்த ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால், அவர் நிச்சயம் தனது ஆட்டத்தை நிரூபிக்க காத்திருப்பார். எனவே அவருக்கு டெல்லி அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரின் ஆட்டத்தால் அவருக்கும் டெல்லி அணிக்கும் இது சிறந்த ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அணிக்கு பலம்

அணிக்கு பலம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறை ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற டெல்லி அணி தோல்வியை சந்தித்தது. எனவே இந்தாண்டு கோப்பையை வெல்ல ஸ்மித்தை அணியில் சேர்த்துக்கொண்டால், அவரின் அனுபவமும், ஆட்டமும் உதவியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Delhi Capitals Coach Ricky ponting confirms steve smith's position in 2021 IPL
Story first published: Wednesday, April 7, 2021, 17:44 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X