புதிய அவதாரம்.. புதிய வீரர்கள்.. புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் இதுதான்.. விசில் போடு!

Posted By:

பெங்களூர்: இரண்டு நாட்களாக அதிரிபுதிரியாக நடந்த ஐபிஎல் ஏலம் முடிந்து இருக்கிறது. எல்லா அணிகளும் அவர்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து இருக்கிறது.

இதில் ஹைதராபாத் அணியும் பெங்களூர் அணியும் மிகவும் வலுவான அணியாக காணப்படுகிறது. சென்னை அணியும் கடைசி நேரத்தில் மிகவும் வலுவான அணியாக மாறியுள்ளது.

புதிய சென்னை அணியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த சென்னை கண்டிப்பாக கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

 சென்னை

சென்னை

இதில் தொடக்கத்தில் சென்னை அணி மிகவும் வயதான வீரர்களை மட்டுமே எடுத்து வந்தது. ஆனால் கடைசியில் இளம் வீரர்களை எடுத்து சென்னை அணி அதை ஈடுகட்டியது. அணிக்கு தேவையான 25 வீரர்களையும் எடுத்த அணிகளில் சென்னை அணியும் ஒன்றாகும்.

 எத்தனை ஆல்ரவுண்டர்

எத்தனை ஆல்ரவுண்டர்

சென்னை அணியில் மொத்தம் 10 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பிராவோ, ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், கனிஷ்க் சேத், துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய் ஆகியோர் ஆவர். அனைத்து வயதினரும் இதில் கலந்து இருக்கிறார்கள்.

 சென்னை பவுலர்கள்

சென்னை பவுலர்கள்

முதலில் சென்னை அணியில் சரியான பவுலிங் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அதுவும் சரி செய்யப்பட்டது. கரன் சர்மா, ஷரத்துல் தாக்குர், ஹர்பஜன் சிங், மார்க் வுட், முகமது இம்ரான் தாஹிர், ஆசிப் கே எம், லுங்கி சாணி கிடி, மோனு சிங் இவர்கள் அனைவரும் பவுலிங் செய்வார்கள். இது இல்லாமல் மேலே இருக்க கூடிய நபர்களும் பவுலிங் செய்ய கூடியவர்கள்.

 பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

சென்னையின் பேட்டிங் மட்டும் செய்ய கூடிய நபர்கள் என்று பார்த்தால் ரெய்னா, டோணி, முரளி விஜய், டியூ பிளசிஸ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் நாராயண் ஆகியோர் உள்ளனர். இதில் டோணி, ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் கீப்பிங் செய்யக்கூடியவர்கள்.

அணி

ரெய்னா, டோணி, முரளி விஜய், டியூ பிளசிஸ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் நாராயண், பிராவோ, ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், கனிஷ்க் சேத், துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய், கரன் சர்மா, ஷரத்துல் தாக்குர், ஹர்பஜன் சிங், மார்க் வுட், முகமது இம்ரான் தாஹிர், ஆசிப் கே எம், லுங்கி சாணி கிடி, மோனு சிங் என சென்னை அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction 2018 was held in Bengaluru yesterday and today. CSK took Dhoni, Vijay, Lungi , Raina, Jadeja, Bravo, Faf, Kedar, Rayudu, Karn, Tahir, Thakur, Santner, Watson, Jagadeesan, Chahar, Asif, Wood, Shorey, Kanish ,Billings, Bhajji, Bishoni, Monu, Kshitiz.
Story first published: Monday, January 29, 2018, 6:30 [IST]
Other articles published on Jan 29, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற