For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"1009 ரன்கள்" சாதனை புரிந்த பிரணவ்- மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மாதம் ரூ.10000 உதவித்தொகை!

மும்பை: மும்பையில் கிரிக்கெட் போட்டியில் 1009 ரன்கள் அடித்து சாதனை படைத்த பிரணவிற்கு மாதம் ரூபாய் 10,000 உதவித்தொகையை அளிக்க முடிவு செய்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

Dhanawade gets MCA scholarship after 1009 run feat

இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களில் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைத்த பிரணவினை பலரும் பரிசு மழையால் நனைத்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பாக பிரணவுக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத் தொகை கிடைக்க உள்ளது.

Dhanawade gets MCA scholarship after 1009 run feat

இந்த மாதம் முதல் டிசம்பர் 2021 வரை பிரணவுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 10,000 வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Story first published: Thursday, January 7, 2016, 9:31 [IST]
Other articles published on Jan 7, 2016
English summary
A day after Mumbai school cricketer Pranav Dhanawade scored a world record of 1,009 not out in an H.T. Bhandari Cup Under-16 inter-school tournament match, the Mumbai Cricket Association (MCA) announced a scholarship of Rs.10,000 per month for the 15-year-old.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X