For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி ஹேட்டர்களையும் உணர்ச்சி பொங்க கத்த வைத்த அந்த ஒரு நிமிடம்..!

By Veera Kumar

மும்பை: ஒருநாள் மற்றும், டி20 கேப்டன் பதவிகளை துறப்பதாக டோணி அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு மீம்களும், உருக்கமான தகவல்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. டோணியை வெறுத்தவர்களும், அவரது கேப்டன்ஷிப் திறமையை மறுக்க முடியாமல் உருகுவதை பார்க்க முடிகிறது.

இதுபோல சில டோணியின் நெகிழ்வு தருணங்கள் குறித்த சமூக வலைத்தள பதிவுகள் உங்கள் பார்வைக்கு

அந்த ஒரு நிமிடம்

100 கோடி மக்கள் (இப்ப திட்டுற அதிபுத்திசாலிகளையும் சேர்த்து) உணர்ச்சி பொங்க கத்துன அந்த ஒரு நிமிஷம், இதெல்லாம் எவனுக்கும் வாய்க்காது என குறிப்பிடுகிறது இந்த டிவிட். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை வென்றபோது டோணி அடித்த சிக்சர் காட்சி இது.

சுயநலம் இல்லை

இன்னும் 1 போட்டி கேப்டனாக ஆடியிருந்தாலும் இந்திய அணிக்காக 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சாதனைக்கு டோணி சொந்தக்காரர் ஆகியிருப்பார். ஆனாலும் அவர் கேப்டன் பதவியை துறந்துள்ளார். இருப்பினும் டோணியை சுயநலவாதி என விமர்சனம் செய்யும் ரசிகர்களும் இருப்பதை இந்த போட்டோ மீம் சுட்டிக்காட்டுகிறது.

எல்லாவற்றிலும் சாம்பியன்

இந்த மீம்க்கு விளக்கம் சொல்ல தேவையில்லை. உலக கோப்பை டி20, 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன் டிராபி என அனைத்தையும் இந்திய அணி பெற்றது டோணி தலைமையில். சிறப்பான ஆல்ரவுண்டர் அணியை வைத்திருந்த ஆஸி.யின் ரிக்கி பாண்டிங்கால் கூட முடியாத விஷயம் இது.

அன்று முதல் இன்றுவரை

எல்லா காலத்திலும் சிறப்பாக முத்திரை பதித்தவர் டோணி என்பதை இந்த மீம் சொல்கிறது.

கங்குலிக்கு மரியாதை

கங்குலி ஆடிய கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில், கேப்டனாக டோணி இருந்தபோதிலும், கங்குலியை கேப்டனாக செயல்பட அனுமதித்தார். அந்த குட்டி வீடியோ இது. டோணியின் பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தது இது.

Story first published: Thursday, January 5, 2017, 10:34 [IST]
Other articles published on Jan 5, 2017
English summary
Dhoni fans create memes to remember his records as he step down fro Captaincy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X