For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி!! மனிஷ் பாண்டேவுக்கு PUBG (பப்ஜி) விளையாட கத்துக் கொடுங்க.. தோனியின் கோரிக்கை

கொல்கத்தா : விராட் கோலி இன்று (நவம்பர் 5) தன் 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கோலியின் பிறந்தநாளுக்காக, பிசிசிஐ இந்திய அணி வீரர்களிடம் இருந்து வாழ்த்து செய்திகளை ஒரு வீடியோவாக உருவாகி வெளியிட்டு இருந்தது.

அதில் தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தங்கள் வாழ்த்து செய்தியை கூறினர்.

என்ன கேட்டார் தோனி?

என்ன கேட்டார் தோனி?

தோனி தன் வாழ்த்தோடு சேர்த்து, கோலிக்கு ஒரு கோரிக்கையும் வைத்தார். அதில் கோலி ஒரு PUBG (பப்ஜி) ரசிகர் என தெரியும். இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு அந்த விளையாட்டில் குறிப்பிட்ட ஒரு முறையை எப்படி ஆடுவது என கற்றுத் தருமாறு கோரிக்கை வைத்தார் தோனி.

இந்திய அணியின் விளையாட்டு

இந்திய அணியின் விளையாட்டு

இந்தியாவில் சமீபத்தில் பிரபலமாகி வரும் விளையாட்டு இந்த PUBG. சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமான நிலையத்தில் காத்திருந்த போது இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்ததாக ஒரு புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது.

மேட்ச்ல விளையாட சொன்னா போன்-ல விளையாடிட்டு இருக்காரு தோனி.. என்ன கேம்னு தெரியுமா?

ஜடேஜா கேட்டது என்ன?

ஜடேஜா கேட்டது என்ன?

கோலிக்கு வாழ்த்து சொன்னவர்களில் ரவீந்திர ஜடேஜா வித்தியாசமான வாழ்த்து செய்தியை சொல்லி இருந்தார். ஜடேஜா, கோலியை அரிசி, சப்பாத்தி, நிறைய இனிப்புகள் இதையெல்லாம் உண்ணுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ரிஷிகேஷ் போன கோலி

ரிஷிகேஷ் போன கோலி

ஜடேஜா இப்படி கூறக் காரணம், கோலி தன் உடற்தகுதியை மேம்படுத்தும் பொருட்டு, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார். கோலிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கே ஆன்மீக குரு ஒருவரை சந்திக்க உள்ளார் அவர்.

விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள்.. எங்கே இருக்காருன்னு சரியா சொல்லுங்க பார்க்கலாம்?

Story first published: Monday, November 5, 2018, 18:30 [IST]
Other articles published on Nov 5, 2018
English summary
Dhoni has a special request to Kohli on his Birthday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X