For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு? சேப்பாக்கம் ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சொல்லும் சேதி

சென்னை : இனி தல தோனி சென்னை அணிக்காக அடுத்தாண்டு ஆட மாட்டார் என்று உலா வரும் தகவல்களால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

சென்னை அணியைப் பொறுத்தவரை, தோனி இல்லாமல் களமிறங்கினால் மிக மோசமான தோல்வி என்பது பல நேரங்களில் உண்மையாகி இருக்கிறது. அதிலும், குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக போட்டிகளில் தோனி ஆடவில்லை. அதன் விளைவு.... தோல்வி. இந்த 2 போட்டிகளில் சென்னை அணிக்கு கிடைத்த தோல்வியை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை.

நான் கூடத்தான் தோனிகிட்ட மல்லுக்கு நின்னேன்.. ஆனா அதையெல்லாம் உள்ளேயே வைச்சுக்கணும்! நான் கூடத்தான் தோனிகிட்ட மல்லுக்கு நின்னேன்.. ஆனா அதையெல்லாம் உள்ளேயே வைச்சுக்கணும்!

சூப்பர் வெற்றி

சூப்பர் வெற்றி

பின்னர், கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

ஒரு போட்டி பாக்கி

ஒரு போட்டி பாக்கி

ஐபிஎல்லில் இன்னும் ஒரு சில லீக் போட்டிகள் மட்டுமே பாக்கி உள்ளன. அதிலும் சென்னை அணிக்கு ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த ஒரு போட்டியும் மொகாலியில் நடைபெறுகிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியே சென்னை அணி இந்த சீசனில் தனது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டியாகும்.

தோனி உற்சாகம்

தோனி உற்சாகம்

ஆகையால் சென்னை ரசிகர்களுக்கு ஆட்டம் முடிந்தவுடன் டென்னிஸ் பந்துகளை டென்னிஸ் பேட்டால் ரசிகர்களிடம் அடித்து அவர்களை உற்சாகப் படுத்தினார். அது மட்டும் இல்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் ஒரு போட்டோவும் எடுத்து கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. அதோடு... வேறு சில கதைகளும் உலா வரத் தொடங்கிவிட்டன.

எதற்கு போட்டோ?

எதற்கு போட்டோ?

தோனி இப்படி மைதான ஊழியர்களுடன் ஏன் திடீரென போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்? ஐபிஎல் போட்டிகளின் அடுத்த சீசனில் அவர் விளையாட மாட்டார்... விரைவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க இருக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தான் இவ்வாறு அவர் நடந்து கொண்டிருக்கிறார். அது உண்மை என்று உணர்த்தும் வகையில் தான் தோனியின் இந்த புகைப்படமும் இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

ரெய்னாவின் கருத்து

ரெய்னாவின் கருத்து

இந்த தருணத்தில் தான் தோனியின் விவகாரத்தில் ரெய்னாவின் பேட்டியும் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. கேப்டனாக தோனியை இழப்பது விஷயம் அல்ல. ஒரு பேட்ஸ்மேனாக இழப்பது பெரிதாக உள்ளது. இதனால்தான் ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு எதிரான தோல்வி இப்படிப்பட்டதுதான். 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறேன்.

விரைவில் ஓய்வு?

விரைவில் ஓய்வு?

குறிப்பாக தோனி ஓய்வு பெறுகிறார் என்றால் அடுத்த ஆண்டு என்னை அந்த இடத்தில் நீங்கள் அதிகம் பார்க்கலாம் முடித்துக் கொள்கிறார் என்று ரெய்னா கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில்... தோனியின் ஓய்வு என்பது உலக கோப்பை தொடருக்கு பின் அறிவிக்கப்படும் என்பது தற்போது தெள்ளத் தெளிவாகி விட்டது. ஆனால் அந்த... அறிவிப்பு எப்போது என்பது தான் தெரிய வில்லை என்று ரசிகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, May 3, 2019, 14:00 [IST]
Other articles published on May 3, 2019
English summary
Dhoni may not play in next ipl season, csk fans worried.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X