For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி ரன் அவுட்டே இல்லை... பவர்ப்ளேயில் ஏமாற்றிய நியூசி... சமூக வலைதளங்களில் சர்ச்சை

மான்செஸ்டர்: இந்தியாவின் அரையிறுதியில் தோனியின் ரன் அவுட், அவுட் இல்லை என்றும், ஒட்டு மொத்தமாக ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் ஆதாரங்களை வெளியிட்டு ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

உலக அளவில் முக்கிய போட்டிகளின் போது சர்ச்சைகள் எழுவதும், பின்னர் அவை அடங்கி போவதும் வழக்கம். அதில் லேட்டஸ்ட் வரவாக இருப்பது தோனியின் ரன் அவுட். ஒட்டு மொத்த 130 கோடி இந்திய ரசிகர்களை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்த அவுட் அது.

அந்த அவுட் தான் இப்போது ஏகத்துக்கும் சர்ச்சைகளை விதைத்திருக்கிறது. இந்த உலக கோப்பையில் நடுவர்களின் கவனக்குறைவு பல அணிகளை வெற்றியையும், புகழையும் தட்டி பறித்திருக்கிறது. பலரது சாதனைகளை குழி தோண்டி புதைத்திருக்கிறது.

18 ரன்களில் தோல்வி

18 ரன்களில் தோல்வி

தற்போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும், இந்திய அணிக்கும் குறிப்பாக தல தோனிக்கும் நடந்திருக்கும் இந்த விஷயம் ஏற்புடையது அல்ல. இந்தியா, நியூசிலாந்து இடையே செமி பைனல் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது.

தோனி, ஜடேஜா கூட்டணி

தோனி, ஜடேஜா கூட்டணி

போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் ஒட்டு மொத்தமாக சரிய... திணறிய இந்திய அணியை வழக்கம் போல் தோனி, ஜடேஜா கூட்டணி தூக்கி நிறுத்தினர். இருவரும் களத்தில் போராடி அணியை வெற்றியின் அருகே கொண்டு சென்றனர் ஒரு கட்டத்தில் ஜடேஜா அவுட்டாக, கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது.

6 பீல்டர்கள் ஏன்?

6 பீல்டர்கள் ஏன்?

வழக்கமாக 40 முதல் 50 ஓவர் வரை 3வது பவர் பிளே. அந்த பவர் பிளேயின் போது வட்டத்திற்கு வெளியே அதாவது 30 மீட்டர் வட்டத்திற்கு வெளியே 5 வீரர்கள் தான் பீல்டிங்குக்கு நிற்க வேண்டும். ஆனால், நியூசி. கேப்டன் வில்லியம்சன் 6 பீல்டர்களை நிறுத்தி இருந்தார்.

நடுவர்கள் கவனிக்கவில்லை?

நடுவர்கள் கவனிக்கவில்லை?

அவ்வாறு இருந்தால் அந்த பந்து நாட் ஏ பால் என்று அறிவிக்கப்படும். இந்த பீல்டிங் பிளான் வைத்த அடுத்த பந்தில் தான் தோனி 2வது ரன்னுக்கு ஓடி வரும் போது ரன் அவுட்டாகி விடுவார். ஆனால், 6 வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரசிகர்கள், அதனை கவனியாத நடுவர்கள் அவுட் கொடுத்துள்ளனர் என்று கொதித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் புலம்பல்

ரசிகர்கள் புலம்பல்

6 வீரர்கள் பீல்டிங் நிற்பதை கவனிக்காமல் அவுட் கொடுத்துவிட்டு, இந்திய ரசிகர்களையும், உலக கோப்பை கனவையும் ஒன்றுமில்லாமல் நடுவர்கள் செய்துவிட்டனர் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். சமூக வலை தளங்களில் ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

5 பீல்டர்கள் மட்டுமே நின்றிருந்தால், பந்தை த்ரோ செய்து ரன் அவுட் செய்த குப்தில் வேறு இடத்தில் பீல்டிங் செய்திருக்கலாம். தோனி ரன் அவுட் ஆகி இருக்க மாட்டார் என்றும் வலைதளங்களில் ரவுண்டு கட்டி பேசி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 10, 2019, 23:05 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
Dhoni run out against semi final is not out, fans troll.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X