For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

300வது கேட்ச் பிடித்தார் தோனி!

லண்டன்: இந்திய விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி, கீப்பிங்கில் 300வது கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா தோல்வி அடைந்தது. இப்போட்டியில் தோனி சில சாதனைகளைப் படைத்தார்.

dhonis 300th catch

ஆட்டத்தின் 36ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் தோனியிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்யை இழந்தார். இது ஒருநாள் போட்டிகளில் தோனி பிடித்த 300 ஆவது கேட்ச் என்பது சிறப்பம்சமாகும்.

இதுவரை 320 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 300 கேட்ச்களை பிடித்துள்ளார். மேலும் 107 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக 407 விக்கெட்கள் விழுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

dhonis 300th catch

அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள் விவரம்:

முதல் இடம் :

ஆஸ்திரேலியா அணியின் ஆடம் கில்கிறிஸ்ட்

போட்டிகள் : 287 கேட்ச்கள் : 417

dhonis 300th catch

இரண்டாமிடம்:

தென்னாப்பிரிக்கா அணியின் மார்க் பவுச்சர்

போட்டிகள் : 295 கேட்ச்கள் : 402

மூன்றாமிடம் :

இலங்கை அணியின் குமார் சங்கக்காரா

போட்டிகள் : 404 கேட்ச்கள் : 383

தோனி, கில்கிறிஸ்டின் சாதனையை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, July 15, 2018, 15:28 [IST]
Other articles published on Jul 15, 2018
English summary
Dhoni has taken 300 catches in ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X