கோஹ்லியிடம் மோதிய ராணா.. தூசி தட்டி வீட்டுக்கு அனுப்பிய டோணி!

Posted By:
கோஹ்லியிடம் விளையாடிய ராணாவை வீட்டுக்கு அனுப்பிய தோனி | Dhoni's master plan

சென்னை: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லியிடம் கோபமாக பேசிய கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா இந்த போட்டியில் 16 ரன்களில் அவுட் செய்யப்பட்டுள்ளார்.

சென்ற கொல்கத்தா போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யாருமே இந்த போட்டியில் சரியாக விளையாடவில்லை. கொல்கத்தாவின் தொடக்க வீரர் சுனில் நரேனும் எளிதாக அவுட் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கொல்கத்தா அணி மிகவும் மோசமாக திணறி வருகிறது. 15 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு ஆடி வருகிறது.

சுனில் நரேன்

சுனில் நரேன்

சென்ற போட்டியில் சுனில் நரேன், நிதீஷ் ராணா ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். முக்கியமாக சுனில் நரேன் முதல் பேட்ஸ்மேனாக இறங்கி 15 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். அவர்தான் அந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுனில் நரேன் அவுட்

சுனில் நரேன் அவுட்

ஆனால் இந்த போட்டியில் சுனில் நரேனை ஆரம்பத்திலேயே சுருட்ட சென்னை அணி திட்டமிட்டது. இதனால் இரண்டாவது ஓவர் ஹர்பஜன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டது. டோணியின் திட்டம் இதில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் சுனில் வெறும் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

யார் ராணா

யார் ராணா

தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ராணா, டெல்லியை சேர்ந்தவர். பெங்களூருக்கு எதிரான போட்டியில் இவர் போட்ட ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். முதலில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை எடுத்துவிட்டு கோஹ்லி விக்கெட்டையும் எடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார். அவர் கோஹ்லி விக்கெட்டை எடுத்த போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். உடனே கோஹ்லியை பார்த்து கோபமாக கத்தினார்.

நடக்கவில்லை

நடக்கவில்லை

அந்த போட்டியில் அவர் பேட்டிங்கும் சிறப்பாக செய்தார். அந்த போட்டியில் அவர் 34 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்த போட்டியில் அவரது ஆட்டம் டோணியின் திட்டத்திடம் செல்லுபடியாகவில்லை. வந்த வேகத்தில் 16 ரன்களில் அவுட்டானார். வாட்சன் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni's master plan to take Niteesh Rana wicket.
Story first published: Tuesday, April 10, 2018, 21:10 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற