For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதனால்தாங்க தோனி சூப்பர் ஸ்பெஷல்.. ரகசியத்தை போட்டுடைத்த டைபு

சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்ற கேப்டன்களை விட மன ரீதியில் மிகவும் ஸ்திரமானவர், பலமானவர். எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து போகக் கூடியவர். அருமையாக திட்டமிடக் கூடியவர். இதனால்தான் மற்ற கேப்டன்களிடமிருந்து அவர் வேறுபட்டுக் காணப்பட்டார் என்று முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் தாதன்டா டைபு கூறியுள்ளார்.

தோனி என்றாலே தனிதான்.. ஸ்பெஷல்தான்.. இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த மிகச் சிறந்த கேப்டன். அஸாருதீன், கங்குலிக்குப் பிறகு இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் தோனிதான்.

தோனியுடன் இணைந்து விளையாட முன்னணி வீரர்கள் பலரும் கூட ஆசைப்படுவார்கள். காரணம் தோனியிடமிருந்து கிடைக்கும் அந்த மோட்டிவேஷன். இந்த நிலையில் தோனி எப்படி மற்றவர்களிடமிருந்து சிறந்து விளங்கினார் என்பதை டைபு விளக்கியுள்ளார்.

எப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்!எப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்!

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இதுதொடர்பாக அவர் ஒரு யூடியூப் சானலுக்கு அளித்துள்ள பேட்டியில், முதல் முறை நான் தோனியை சந்தித்தபோது பெரிதாக ஐடியா எதுவும் இல்லை. இந்தியா ஏ அணியில் தோனி இடம் பெற்றிருந்தார் அப்போது. அவரை விட தினேஷ் கார்த்திக் சிறந்த வீரர் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரை விட தோனி ரொம்ப இயல்பான திறமைகளுடன் கூடியவராக இருந்தார். பேட்டிங்கிலும் கூட ரொம்ப நேச்சுரலாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

தோனியின் ஸ்டைல்

தோனியின் ஸ்டைல்

அவர் பந்துகளை பிடிக்கும் விதமே தனியாக இருக்கும். எல்லோரையும் போல அவர் செயல்பட மாட்டார். நல்லா பாத்தீங்கன்னா தெரியும். மின்னல் வேகத்தில் பந்தைப் பிடித்து அதை வெளியே எறிவது அவரது உத்தி. ரொம்ப வித்தியாசமானது. அதேசமயம், பழைய டெக்னிக்கும் கூட. அதை அவர் சிறப்பாக செய்வார் என்று பாராட்டு தெரிவித்துள்ள டைபு.

சூப்பர் பேட்டிங்

சூப்பர் பேட்டிங்

அதேபோலத்தான் அவரது பேட்டிங் ஸ்டைலும் கூட வித்தியாசமானது. கண்ணுக்கும், கைக்கும் இடையிலான அவரது ஒருங்கிணைப்பு அபாரமாக இருக்கும். மன வலிமையும் அதேபோல பிரமிக்க வைக்கக் கூடியது. அவரது மனோ பலம்தான் அவரை சிறந்த பேட்ஸ்மேனாகவும் மாற்றியிருக்க வேண்டும் என்பது எனது எண்ணமாகும். தோனியின் திறமைகள் தனித்துவம் வாய்ந்தவை என்றார் டைபு.

கில்கிறிஸ்ட் வேறு ரகம்

கில்கிறிஸ்ட் வேறு ரகம்

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் அருமையான நேச்சுரல் பேட்ஸ்மேன். ஆனால் அவரது கீப்பிங் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது கிடையாது. எனவே அவரை தோனியுடன் ஒப்பிட முடியாது. அவர் பேட்டிங்கைவிட அதிகம் கீப்பிங் செய்துள்ளார். இதற்குக் காரணம் பேட்டிங்தான் அவருக்கு ஈஸியானது. நேச்சுரலானது. எனவேதான் அவர் கீப்பிங்கை சரி செய்ய அதிக கவனம் செலுத்துவார். ஆனால் தோனி அப்படி இல்லை. இரண்டுமே அவருக்கு எளிதானது என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, June 9, 2020, 15:42 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
Mahendra Singh Dhoni's mental toughness separated him from his contemporaries -Tatenda Taibu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X