For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி டெஸ்ட் டீம்ல இருந்திருக்கலாம்.. வருத்தப்படும் முன்னாள் வீரர்!

டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்க கூடாது என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் குறிப்பிட்டு இருக்கிறார்.

By Shyamsundar

கேப்டவுன்: இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இந்தியாவிற்கு இந்த வருட தொடக்கமே மிகவும் மோசமாக தொடங்கி இருக்கிறது.

இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சு நன்றாக இருந்தாலும் பேட்டிங் சொதப்பிவிடுகிறது.

அதேபோல் கேப்டன்ஷிப்பும் சரியில்லை என்று தற்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. போதாக்குறைக்கு கீப்பிங்கும் சரியில்லை என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகிறார்கள். முக்கியமாக ஓப்பனிங், மிடில் ஆர்டர் இரண்டும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.

மோசமான கீப்பிங்

மோசமான கீப்பிங்

அதேபோல் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கு சரியான கீப்பிங் இல்லாமல் இருந்து வருகிறது. சாஹா கால் பகுதியில் அடிப்பட்ட காரணத்தால் இந்தியா திரும்பிவிட்டார். தற்போது தினேஷ் கார்த்திக் தொடரில் இடம்பிடித்து உள்ளார். ஆனால் பர்தீவ் பட்டேல் மிகவும் மோசமாக கீப்பிங் செய்து வருகிறார். பேட்டிங்கும் அவர் சரியாக செய்வதில்லை.

கேப்டன்ஷிப்

கேப்டன்ஷிப்

கோஹ்லி தற்போது கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக எந்த வீரரை அணியில் சேர்ப்பது என்று தெரியாமல் கோஹ்லி குழம்பி வருகிறார். இந்த போட்டியில் அவர் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்க்காமல் போனதற்கான சரியான காரணம் இன்னும் சரியாக தெரிவிக்கப்படவில்லை.

டோணி இல்லையே

டோணி இல்லையே

டோணி இல்லாதது அணிக்கு பெரும் குறைவாக இருக்கிறது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் இருந்திருந்தால் தற்போது அணியில் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது என்று கூறியுள்ளார். முக்கியமாக கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது என்றும் அவர் பேசியுள்ளார்.

தல

தல

மேலும் டோணி நல்ல கேப்டன் என்றும் கூறியுள்ளார். கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்றாலும், கோஹ்லிக்கு வழிகாட்டியாக இருந்திருக்கலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் டோணி மிகவும் அவசரப்பட்டு ஓய்வு அறிவித்துவிட்டார் என்றும் கவாஸ்கர் வருத்தப்பட்டு இருக்கிறார்.

Story first published: Wednesday, January 17, 2018, 10:42 [IST]
Other articles published on Jan 17, 2018
English summary
Former India captain and legendary batsman Sunil Gavaskar badly misses the presence of seasoned campaigner Mahendra Singh Dhoni in the Indian dressing room during as the latter is no more part of the Test side. Gavaskar feels MS Dhoni's presence as a senior player could have been quite handy for the teammates during the challenging series of South Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X