போட்டியை மக்கள் கொண்டாடினார்கள்... நேற்றைய ஆட்டம் குறித்து டோணி என்ன சொல்கிறார்!

Posted By:
நேற்றைய போட்டி குறித்து தோனி கருத்து- வீடியோ

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக பார்த்தார்கள் என்று டோணி பேட்டி அளித்துள்ளார்.

கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ரவீந்தர் ஜடேஜா 2 பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். சென்னை அணி 1000 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பின்

இரண்டு வருடங்களுக்கு பின்

டோணி அளித்த பேட்டியில் ''நாங்கள் இரண்டு வருடங்களுக்கு பின் இங்கு விளையாடுகிறோம். இந்த மைதானத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை அணி இப்படி ஒரு வெற்றியை பெறதான் காத்துக் கொண்டு இருந்தது. அது கிடைத்துவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காட்டிக் கொள்ள மாட்டோம்

காட்டிக் கொள்ள மாட்டோம்

மேலும் ''நாங்கள் களத்தில் எப்போதும் எங்கள் உணர்வுகளை காட்டிக்கொள்ள மாட்டோம். அப்படி காட்டினால் அது வர்ணனை செய்பவர்களுக்கு தீனியாக மாறிவிடும். அவர்கள் அப்போது எங்களை குறித்து ஏதாவது பேசுவார்கள். அது எங்கள் போட்டியை பாதிக்கும். அதனால்தான் நாங்கள் எதையும் காட்டிக் கொள்வதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக விளையாடினார்கள்

நன்றாக விளையாடினார்கள்

வீரர்கள் குறித்து பேசிய டோணி, ''இந்த போட்டியில் சென்னை வீரர்கள் மிகவும் நன்றாக விளையாடினார்கள். முக்கியமாக பவுலர்கள் தொடக்கத்திலேயே ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைசி நேரத்தில் கொஞ்சம் போட்டி கையை விட்டு நழுவி செல்வது போல இருந்தது. ஆனால் அதை நாங்கள் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை'' என்றார்.

கொண்டாடினார்கள்

கொண்டாடினார்கள்

மேலும் டோணி இதில் சென்னை மக்கள் குறித்தும் குறிப்பிட்டார். அதில் ''சென்னை மக்கள் போட்டியை மிகவும் ஆரவாரமாக ரசித்தார்கள். இரண்டு இன்னிங்ஸிலும் அவர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தனர். இவ்வளவு நாட்களுக்கு பின் சென்னையில் நாங்கள் விளையாடுவது அவர்களுக்கு சந்தோசமாக இருந்தது'' என்றார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni speaks about yesterday match between CSK and KKR.
Story first published: Wednesday, April 11, 2018, 9:49 [IST]
Other articles published on Apr 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற