வெறும் 14.2 ஓவர்களில் சுருண்டது டெல்லி... கொல்கத்தா 71 ரன்களில் வென்றது

Posted By:
அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி .... கொல்கத்தா மாஸ் வெற்றி ...

கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 11ல் இன்று நடந்த 13வது ஆட்டத்தில், டெல்லி கேப்டன் கம்பீர் டாஸ் வென்றார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. டெல்லி 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரிஷப் பந்த் 43, கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்கள் எடுத்தனர். சுனில் நரேன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஐபிஎல் சீசன் 11ல் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்க உள்ளன. சீசன் துவங்கி ஒரு வாரமாகியுள்ள நிலையில், இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. அனைத்து அணிகளுமே தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் சன் ரைசரஸ் ஐதராபாத் அணி மூன்றிலும் வென்று, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் சீசனின் 13வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 7வது இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

கொல்கத்தா கேப்டன் தினேஷ்

கொல்கத்தா கேப்டன் தினேஷ்

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, தனது முதல் ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியை வென்றது. சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கொல்கத்தா தோல்வியடைந்தது.

வெற்றியின் பாதையில் டெல்லி

வெற்றியின் பாதையில் டெல்லி

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து, இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர் தற்போது டெல்லி அணியின் கேப்டனாக உள்ளார். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் டெல்லி தோல்வியடைந்தது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுள்ளது.

வெற்றிக்காக போராட்டம்

வெற்றிக்காக போராட்டம்

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா இன்று களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து இரண்டு தோல்விகளுக்குப் பிறகு வெற்றியின் பாதைக்கு திரும்பியுள்ள டெல்லி, அதை தொடரும் இலக்குடன் களமிறங்குகிறது.

ஈடனில் கொல்கத்தா ஆதிக்கம்

ஈடனில் கொல்கத்தா ஆதிக்கம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இரு அணிகளும் 7 முறை சந்தித்ததில், கடைசி 6 முறையும் கொல்கத்தாவே வென்றுள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கவுதம் கம்பீர் பவுலிங் தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. நிதின் ரானா அதிகபட்சமாக, 59 ரன்கள் எடுத்தார். ஆந்தரே ரசல் 41, ராபின் உத்தப்பா 35, கிறிஸ் லைன் 31, தினேஷ் கார்த்திக் 19 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்களை ராகுல் தெவாட்டியா எடுத்தார்.

201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே ஜாசன் ராயை இழந்தது. ஸ்ரேயாஸ் ஐயர், கவுதம் கம்பீர் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த், 43 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அதன்பிறகு மளமளவென்று விக்கெட்கள் விழ, 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு சுருண்டது. சுனில் நரேன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Kolkotta knight riders looking for win after two defeats in the match against delhi daredevils.
Story first published: Monday, April 16, 2018, 16:04 [IST]
Other articles published on Apr 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற