For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் ஸ்டுடியோக்குள் வந்த தினேஷ் கார்த்திக்..டி20 உலககோப்பையில் சொதப்பிய எதிரொலி..மீண்டு வருவாரா?

பெங்களூரு : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்தபடி செயல்படாத தினேஷ் கார்த்திக் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு தற்போது 37 வயதாகிறது. அடுத்த டி20 உலக கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது.

இதனால், அப்போது கார்த்திக்கின் வயது 39 ஆகிவிடும். இதனால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

உலக சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு.. டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டுவாரா? உலக சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு.. டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டுவாரா?

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் sky ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்தார்.

அப்போது பலரும் தினேஷ் கார்த்திக் அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்து விட்டதாகவும், அவருக்கு கிரிக்கெட்டில் இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்றும் கூறினர்.

ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு

ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் ஆர் சி பி அணியில் ஃபினிஸராக களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பினார்.இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் மிகவும் தேவைப்படும் நேரமான டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சொதப்பினார். இதனால் கடைசி இரண்டு போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஸ்டுடியோக்கு திரும்பினார்

ஸ்டுடியோக்கு திரும்பினார்

இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முற்றிலும் இளைஞர்களை கொண்ட அணியை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.இதனால் தினேஷ் கார்த்திக், நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை.இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மீண்டும் தொலைக்காட்சி ஸ்டுடியோக்கு வந்து கிரிக்கெட் குறித்து பேசும் தொகுப்பாளராக மாறிவிட்டார்.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

cricbuzz தளத்தில் இந்தியா நியூசிலாந்து தொடர் குறித்து பேசும் கிரிக்கெட் வர்ணனனையாளராக தினேஷ் கார்த்திக் தற்போது பணியை தொடங்கி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை கார்த்திக் வீண் அடித்து விட்டதாக வேதனை தெரிவித்தனர். எனினும் கடந்த பத்து மாதங்களில் தினேஷ் கார்த்திக் பினிஷராக இந்தியாவுக்கு நிறைய போட்டிகளை வெற்றி பெற்று தந்துள்ளது பெரும் சாதனை தான் என்றும் கூறியுள்ளனர்.

Story first published: Friday, November 18, 2022, 17:37 [IST]
Other articles published on Nov 18, 2022
English summary
Dinesh Karthik return to the broadcast studio after short stint in indian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X