மாஸ் பண்றாங்க.. கும்முன்னு இருக்கு.. சிஎஸ்கேவை கொல்கத்தா போட்டியில் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

Posted By:
சிஎஸ்கேவை கொல்கத்தா போட்டியில் தமிழில் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

பஞ்சாப்: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டிக்கு பின் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

பொதுவாக கிரிக்கெட் களத்தில் தமிழில் பேசக்கூடிய நபர் ஒருவர் இருந்தால் தினேஷ் கார்த்திக் அவர்களிடம் தமிழில் பேசுவார். இந்த நிலையில் தற்போது கொல்கத்தா சென்றும் அவர் தமிழில் பேசி இருக்கிறார்.

நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இதன் பின் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தொடக்கமே அதிரடி

தொடக்கமே அதிரடி

தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரை அதிரடியாக தொடங்கி இருக்கிறார். அவர் தன்னை ஒரு சிறந்த கேப்டன் என்று இந்த போட்டியின் மூலம் நிரூபணம் செய்துள்ளார். திறமைவாய்ந்த பெங்களூர் அணியை எளிமையாக வெற்றி பெற செய்துள்ளார்.

தமிழ் விளையாடும்

தமிழ் விளையாடும்

நேற்று நடந்த போட்டியின் போது அவர் அடிக்கடி தமிழில் பேசினார். பெங்களூர் வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச வந்த போது, வேண்டுமென்று பேட்டிங் செய்யாமல் நின்று அவரை விளையாட்டாக கடுப்பேற்றினார். பின் அவரிடம் தமிழில் கிண்டலாக பேசிக்கொண்டு இருந்தார். ஐபிஎல் போட்டியில் இரண்டு எதிரணி வீரர்கள் இப்படி தமிழில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தினேஷ் கார்த்திக் காமெடி

தினேஷ் கார்த்திக் காமெடி

இந்த நிலையில் போட்டி முடிந்தும்அவர் தமிழில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக்கிடம் பெண் ஒருவர் கிரிக்கெட் பந்தில் கையெழுத்து போட சொல்கிறார். உடனே அவரது தமிழ் நண்பர் ''இப்படியே 50 பந்துல கையெழுத்து போட சொல்லுவாங்க'' என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு தினேஷ் கார்த்திக் ''ஜி கலாய்க்கிறீங்க பார்த்தீங்களா, அந்த அம்மாவை'' என்று காமெடியாக பேசியுள்ளார்.

சென்னை அணி

அதற்கு அடுத்து ''மாஸ்ஸா பண்றாங்க நம்ம சிஎஸ்கே. நேத்து செம மேட்ச்ல. கும்முன்னு ஸ்டார் ஆச்சு'' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பைக்கு எதிராக பெற்ற முதல் வெற்றியை பாராட்டி பேசி இருக்கிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dinesh Karthik's funny Tamil convo in yesterday IPL match.
Story first published: Monday, April 9, 2018, 10:26 [IST]
Other articles published on Apr 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற