3 பெரும்தலைகளின் தலையீடு.. இந்திய அணிக்குள் அவசர மீட்டிங்.. டிராவிட் தடாலடி நடவடிக்கை!

நாக்பூர்: இந்திய அணியில் 3 பேர் தலைமையில் அவசர அவசரமாக ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

208 ரன்களை குவித்த போதும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.

3 ஓவரில் 62 ரன்கள்.. இந்திய மகளிர் அணி அபாரம்.. இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதனை3 ஓவரில் 62 ரன்கள்.. இந்திய மகளிர் அணி அபாரம்.. இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதனை

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

ஆசிய கோப்பை தொடரிலும் இதே போன்ற தவறுகளால் தான் இந்தியா இறுதிப்போடிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சமயத்தில் இந்திய அணியின் பவுலிங் இவ்வளவு மோசமாக இருப்பது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இதனை சரிசெய்ய அணிக்குள் அவசர மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர மீட்டிங்

அவசர மீட்டிங்

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ரே, வீரர்களின் மனநல மேம்பாட்டாளர் பேடி அப்டன் ஆகியோரின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா உட்பட அனைத்து பவுலர்களும் இடம்பெறவுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர்.

 காரணம் என்ன

காரணம் என்ன

இந்தியாவின் பவுலிங் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் வீரர்கள் மனதளவில் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். எனவே அவர்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் யுவேந்திர சாஹலுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

தனி கவுன்சிலிங்

தனி கவுன்சிலிங்

இந்த கூட்டம் முடிந்த பிறகு ஒவ்வொரு பவுலருடனும் மனநல மேம்பாட்டாளர் பேடி அப்டன் தனித்தனியாக பேசவுள்ளார். அப்போது வீரர்களுக்கு மனதளவிலான நம்பிக்கையை கொடுக்கவுள்ளார். விராட் கோலிக்கு கொடுத்ததை போன்றே பவுலர்களுக்கும் பழைய வீடியோக்கள் போட்டு காட்டப்படவுள்ளதாக தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rahul dravid arranged Emergency Meeting in Team India, after bowler shows poor perform in 1st t20 against australia
Story first published: Thursday, September 22, 2022, 19:42 [IST]
Other articles published on Sep 22, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X