For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னையா டீமை விட்டு தூக்குறீங்க? சரமாரியாக விளாசிய இங்கிலாந்து வீரர்.. மிரள வைத்த வெறியாட்டம்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

அதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அரங்கில் சாதனையும் செய்தார். அவரை அணியில் நிரந்தர வீரர் என்ற இடத்தில் இருந்து நீக்க இங்கிலாந்து திட்டமிட்டு இருக்கும் நிலையில் தன் பேட்டிங் மூலம் கேள்வி எழுப்பி இருக்கிறார் பிராடு.

பிட்டா இருக்கற வரைக்கும் விளையாட வேண்டியதுதானே... அவர யார் என்ன செய்ய முடியும்?பிட்டா இருக்கற வரைக்கும் விளையாட வேண்டியதுதானே... அவர யார் என்ன செய்ய முடியும்?

ஸ்டூவர்ட் பிராடு நீக்கம்

ஸ்டூவர்ட் பிராடு நீக்கம்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

கடும் கோபம்

கடும் கோபம்

அதனால் கடும் கோபம் அடைந்தார் பிராடு. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களின் வெற்றியில் தன் பங்கு அதிகம் எனும் நிலையில் தன்னை ஏன் அணியை விட்டு நீக்கினார்கள் என பொங்கி எழுந்து பேட்டி அளித்து இருந்தார் பிராடு.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

இங்கிலாந்து அணியின் இரட்டை வேகப் பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராடு இருவருக்கும் வயதான நிலையில் அடுத்த தலைமுறை பந்துவீச்சாளர்களை வளர்க்க இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒருவருக்கு இடம் இல்லை

ஒருவருக்கு இடம் இல்லை

அதன் காரணமாக இனி இருவரும் ஒரே நேரத்தில் அணியில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து அணி தெரிவித்து இருந்தது. அதனால் தான் முதல் போட்டியில் பிராடும், இரண்டாவது போட்டியில் ஆண்டர்சனும் அணியில் இடம் பெறவில்லை.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

மூன்றாவது போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி அவர்கள் இருவரையும் அணியில் தேர்வு செய்து இருந்தது. பந்துவீச்சில் இருவரும் கலக்கினர். அதற்கு முன்னதாக முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் ஸ்டூவர்ட் பிராடு அதிரடி ஆட்டம் ஆடினார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்டத்தில் பின் தங்கி இருந்தாலும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் விக்கெட் வேட்டை நடத்தியது. இங்கிலாந்து அணி 280 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து இருந்தது.

ஸ்டூவர்ட் பிராடு அதிரடி

ஸ்டூவர்ட் பிராடு அதிரடி

அப்போது பத்தாவது பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய ஸ்டூவர்ட் பிராடு அதிரடி ஆட்டம் ஆடினார். 300 ரன்களை கூட தாண்டாது என நினைத்தவர்களை வியக்க வைத்தார். பவுண்டரிகளை குவித்த அவர் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம்

அதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். இயான் போத்தம், ஆண்ட்ரூ பிளின்டாப் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

62 ரன்கள்

62 ரன்கள்

அதிரடி ஆட்டம் ஆடிய ஸ்டூவர்ட் பிராடு 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். 9 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 369 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெ.இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Story first published: Wednesday, July 29, 2020, 11:34 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
ENG vs WI : Stuart Broad third fastest fifty in 3rd test match against West Indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X