For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

498 ரன்கள் விளாசிய இங்கிலாந்து.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. 47 பந்தில் சதம் விளாசிய பட்லர்

ஆம்ஸ்டேல்வீன்: நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஒருநாள் அணி, 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது.

டெஸ்ட் போட்டிக்கு தனியாக ஒரு அணி நியூசிலாந்துடன் விளையாடி வரும் நிலையில், மார்கன் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி, நெதர்லாந்து தொடரில் விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது நெதர்லாந்து எடுத்த மோசமான முடிவு என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

ரஞ்சி கோப்பையில் ஜெய்ஷவால் சாதனை.. சச்சின், ரோகித் வரிசையில் இடம்பிடித்தார்.. மும்பை அபாரம்ரஞ்சி கோப்பையில் ஜெய்ஷவால் சாதனை.. சச்சின், ரோகித் வரிசையில் இடம்பிடித்தார்.. மும்பை அபாரம்

அடுத்தடுத்து சதம்

அடுத்தடுத்து சதம்

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது தான் நெதர்லாந்து வீரர்கள் கடைசியாக சிரித்தனர். எனெனில் அதன் பிறகு ஒரு ரன கல சம்பவமே மைதானத்தில் நடைபெற்றது. பில் சால்ட், டேவிட் மாலன் ஜோடி இணைந்து, இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.

47 பந்துகளில் சதம்

47 பந்துகளில் சதம்

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 222 ரன்கள் விளாசியது. அதன் பின்னர் தான் களத்துக்கு வந்தார் ஜாஸ் பட்லர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பட்லர், 5 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசிய அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பின்னரும் பட்லர், அதிரடியை மேலும் அதிகரிக்க அடுத்த 20 பந்துகளில் மேலும் 50 ரன்கள் விளாசினார்.

அதிவேக 150 ரன்கள்

அதிவேக 150 ரன்கள்

இதன் மூலம் ஜாஸ் பட்லர் 47 பந்துகளில் சதம் விளாசினார். சரி, இனியாவது கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் என நினைத்த நெதர்லாந்து வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 65 பந்துகளில் பட்லர் 150 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அதிவேகமாக 150 ரன்களை அடித்த டிவில்லியர்சின் சாதனையை 1 பந்தில் பட்லர் தவறவிட்டார். பட்லருடன் ஜோடி சேர்ந்த லியான் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

உலக சாதனை

உலக சாதனை

இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் எடுத்துள்ளது.இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்து 481 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் அடித்திருந்தார். இதில் 14 சிக்சர்கள் அடங்கும்.

Story first published: Friday, June 17, 2022, 20:48 [IST]
Other articles published on Jun 17, 2022
English summary
England created new world record by scoring 498 runs vs Netherland 498 ரன்கள் விளாசிய இங்கிலாந்து.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. 47 பந்தில் சதம் விளாசிய பட்லர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X